twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழர்களின் உணர்வை மதித்து ராஜபக்சே வருகையை மோடி ரத்து செய்ய வேண்டும்: பாரதிராஜா

    By Siva
    |

    சென்னை: எட்டு கோடி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உடனடியாக ராஜபக்சேயின் வருகையை ரத்து செய்ய வேண்டும். அதுவே மோடி அவர்கள் தமிழக மக்களுக்கு செய்யும் முதல் நற்செயலாகும். மேலும் மத்தியில் புதிதாக அமையவிற்கும் அரசிற்கும் தமிழகத்திற்கும் நல்லுறவை வலுப்படுத்தும் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

    Modi should stop Rajapaksa from coming to India: Bharathiraja

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    இந்திய பெருநாட்டின் 15-வது பிரதம மந்திரியாக பதவியேற்கும் நரேந்திர மோடி இந்நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவோடு பதவியேற்கும் இந்நிகழ்வில் எங்களின் மகிழ்வை குழைக்கும் வகையிலும் இந்த அரசின் மேல் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் வகையிலும் லட்சக்கணக்கான எங்கள் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவித்த ராஜபக்சேவை இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பது கண்டனத்திற்குறியது.

    புதிதாக அமையவிருக்கும் அரசின் அதிகாரப்பூர்வமான முதல்நாள் நிகழ்விலேயே ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை உதாசினப்படுத்தியும் அவமதிக்கும் வகையிலும் சர்வதேச விசாரணையை எதிர்நோக்கியிருக்கும் ஒரு போர் குற்றவாளியை அழைத்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

    நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக 37 உறுப்பினர்களை கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் தன் எதிர்ப்பையும் கடும் கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறார். அதேபோல் அனைத்து தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் திமுக தலைவர் கலைஞர் அவர்களும், வைகோ, டாக்டர் ராமதாஸ் போன்ற தமிழகத்தின் அனைத்து தலைவர்களும் கட்சி வேறுபாடுகளின்றி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். மேலும் வைகோ அவர்கள் டெல்லியில் ராஜபக்சேவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்.

    இவ்வனைத்து எதிர்ப்புகளுக்கும் மேலாக ராஜபக்சே இந்நிகழ்வில் கலந்துகொள்வது என்பது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான பல தீர்மானங்களை அவமதிக்கும் செயலாக உள்ளது.

    எட்டு கோடி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உடனடியாக ராஜபக்சேயின் வருகையை ரத்து செய்ய வேண்டும். அதுவே மோடி அவர்கள் தமிழக மக்களுக்கு செய்யும் முதல் நற்செயலாகும். மேலும் மத்தியில் புதிதாக அமையவிற்கும் அரசிற்கும் தமிழகத்திற்கும் நல்லுறவை வலுப்படுத்தும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Director Bharathiraja has told that Modi should stop Sri Lankan president Rajapaksa from coming to India to attend his swearing-in ceremony.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X