twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்திப்பட இசை உலகின் முடிசூடா மன்னன் முகமது ரஃபி..பாகிஸ்தான் செல்லாமல் இந்தியாவில் தங்கிய தேச பக்தர்

    |

    சென்னை: கடவுளின் குரல் எப்படி இருக்கும் என்று கேட்டால் அது ரஃபியின் குரல் போல் இருக்கும் என புகழ்பெற்ற இயக்குநர் சொன்னதுபோல் கந்தர்வ குரலுக்கு சொந்தக்காரரான முகமது ரஃபியின் நினைவு நாள் ஜூலை 31.

    1947 தேசப்பிரிவினையின் போது மனைவி பாகிஸ்தானுக்கு போனபோதும் இந்தியாவிலேயே தங்கிவிட்டார். அது இந்தி திரையுலகின் அதிர்ஸ்டம் எனலாம்.

    36 ஆண்டுகள் 26000 பாட்ல்கள் வரை பாடிய சாதனைக்கு சொந்தக்காரர். இருமுறை தேசிய விருது பெற்றவர் முகமது ரஃபி.

    வாவ்.. எவ்ளோ க்யூட்.. மகளின் முகத்தை முதல் முறையாக காட்டிய நடிகை பிரணிதா.. என்ன பெயர் தெரியுமா? வாவ்.. எவ்ளோ க்யூட்.. மகளின் முகத்தை முதல் முறையாக காட்டிய நடிகை பிரணிதா.. என்ன பெயர் தெரியுமா?

    கஜல், கவ்வாலி, பஜன் அனைத்திலும் மன்னன்

    கஜல், கவ்வாலி, பஜன் அனைத்திலும் மன்னன்

    முகமது ரஃபி இந்தி திரைப்பட உலகம் பேசும் படமாக மாறிய காலத்தில் பின்னணி பாடகராக பாடத்தொடங்கி தான் மறையும் வரை புகழ்பெற்ற பாடகராக இருந்தவர். கடவுளின் குரல் என்று ஒன்றை கற்பனை செய்தால் அது ரஃபியின் குரல்தான் என்று மன்மோகன் தேசாய் குறிப்பிட்டது போல் காந்த குரலுக்கு சொந்தக்காரர் ரஃபி. 1924 பிறந்த அவர் 1980 ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று மறைந்தார். அவரது பாடல்கள் ஃபாஸ்ட் பெப்பி பாடல்கள் முதல் தேசபக்தி பாடல்கள், சோகமான பாடல்கள், காதல் பாடல்கள், கவ்வாலிகள் முதல் கசல்கள் மற்றும் பஜன்கள் முதல் பாரம்பரிய பாடல்கள் வரை பல வகைப்பட்டது.

    பாடாத மொழிகள் எதுவும் இல்லை

    பாடாத மொழிகள் எதுவும் இல்லை

    அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் பல இந்திய மொழிகள் மற்றும் சில வெளிநாட்டு மொழிகளிலும் முதன்மையாக உருது மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். கொங்கனி, அஸ்ஸாமி, போஜ்புரி, ஒடியா, பெங்காலி, மராத்தி, சிந்தி, கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஃபார்ஸி, அரபு, சிங்களம், மொரிஷியன் கிரியோல் மற்றும் டச்சு உள்ளிட்ட சில வெளிநாட்டு மொழிகளிலும் அவர் பாடியுள்ளார்.

    பின்னணி பாடகராக அறிமுகம்

    பின்னணி பாடகராக அறிமுகம்

    ரஃபி பாரம்பரிய இசையை உஸ்தாத் அப்துல் வாஹித் கான் உள்ளிட்ட 3 ஆசிரியர்களிடம் கற்றார். தனது 13 வயதில், லாகூரில் பொது நிகழ்ச்சியில் மேடையேறியது முதல் அனுபவம். 1944 ஆம் ஆண்டு பஞ்சாபி திரைப்படமான குல் பலோச்சிலில் முதலில் பாடினார். கராக ரஃபி லாகூரில் அறிமுகமானார். பின்னர் ஆல் இந்தியா ரேடியோவுக்காக பாட அழைக்கப்பட்டார். 1945 ஆம் ஆண்டு 'காவ்ன் கி கோரி' என்கிற ஹிந்தித் திரைப்படத்தில் பின்னணி பாடகராக அறிமுகமானார்.

    லாகூரில் பிறந்தாலும் சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் தங்கினார்

    லாகூரில் பிறந்தாலும் சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் தங்கினார்

    தொடர்ந்து லைலா மஜ்னு (1945) திரைப்படத்தில் "தேரா ஜல்வா ஜிஸ் நே தேகா" மற்றும் ஜுக்னு (1947) திரைப்படத்தில் "வோ அப்னி யாத் திலானே கோ" ஆகிய பாடல்களுக்காக அவர் திரையில் தோன்றினார். தொடர்ந்து இந்திப்பட உலகில் முன்னணி பாடகராக தலையெடுத்த ரஃபி சுதந்திரத்திற்கு பின் மனைவி பாகிஸ்தானுக்கு போக விரும்பினாலும் இந்தியாவிலேயே தங்கிவிட முடிவெடுத்து தங்கினார். இதனால் அவர் மனைவி அவரை பிரிந்து பாகிஸ்தான் சென்றுவிட்டார்.

    அற்புதமான இசையமைப்பாளர்களுடன் பயணம்

    அற்புதமான இசையமைப்பாளர்களுடன் பயணம்

    1949 இல் ரஃபிக்கு நௌஷாத் உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்களின் தொடர்பு கிடைத்தது. நௌஷாத் உடனான ரஃபியின் தொடர்பு, இந்தி சினிமாவின் மிக முக்கியமான பின்னணிப் பாடகர்களில் ஒருவராக அவரை நிலைநிறுத்திக் கொள்ள உதவியது. 1960 களில், அவர் புகழ்ப்பெற்ற இசையமைப்பாளர்களான ஓ.பி. நய்யார், ஷங்கர் ஜெய்கிஷன், எஸ்.டி. பர்மன் மற்றும் ரோஷன் இசையமைப்பில் பல அற்புதமான பாடல்களை வழங்கினார்.

    அழுதுக்கொண்டே பாடிய பாடலுக்கு தேசியவிருது

    அழுதுக்கொண்டே பாடிய பாடலுக்கு தேசியவிருது

    ரவி இசையமைத்த நீல் கமல் (1968) திரைப்படத்தின் "பாபுல் கி துவான் லெட்டி ஜா" பாடலுக்காக முஹமது ரஃபிக்கு தேசிய விருது கிடைத்தது. திருமணம் ஆகி மணமகன் இல்லம் செல்லும் மகளைப்பிரியாமல் தந்தை பாடுவதாக அமைந்த பாடல். இந்தப்பாடலை கேட்கும் யாரும் அழுதுவிடுவார்கள் அல்லது மனம் கலங்குவார்கள், காரணம் பாடும் போதே முகமது ரஃபியும் அழுதுவிட்டார். பின்னர் 1977 ஆம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டியில் . இந்தப் பாடலின் பதிவின் போது தான் அழுததாக ஒப்புக்கொண்டார். அதன் பின்னர் லக்‌ஷ்மிகாந்த் பியாரிலால் இரட்டையர் இசையமைப்பில் பல அற்புதமான பாடல்களை ரஃபி பாடினார். அவரது திரை வாழ்க்கையில் அதிக பாடல்கள் இவர்களுக்காகத்தான் பாடியுள்ளார். கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையமைப்பிலும் பல அற்புதமான பாடல்களை ரஃபி பாடியுள்ளார்.

    சக ஆளுமைகளுடன் ஏராளமான பாடல்கள்

    சக ஆளுமைகளுடன் ஏராளமான பாடல்கள்

    ரஃபி தனது சமகால பாடகர்களுடன் டூயட் பாடினார், கிஷோர் குமார், மன்னா டே, ஆஷா போஸ்லே மற்றும் லதா மங்கேஷ்கர் ஆகியோருடன் ரஃபி அதிக எண்ணிக்கையிலான டூயட்களைப் பாடினார். அமர் அக்பர் அந்தோணி படத்துக்காக "ஹம்கோ தும்சே ஹோ கயா ஹை பியார்" பாடலில், பாலிவுட்டின் மிகவும் புகழ்பெற்ற பாடகர்களான கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர் மற்றும் முகேஷ் ஆகியோருடன் இணைந்து பாடலைப் பாடினார். அவர்கள் அனைவரும் ஒரே பாடலுக்காக குரல் கொடுத்த ஒரே பாடல் இதுதான்.

    ராயல்டி கொள்கையில் ரஃபியின் எண்ணம் லதாமங்கேஷ்கருடன் மோதல்

    ராயல்டி கொள்கையில் ரஃபியின் எண்ணம் லதாமங்கேஷ்கருடன் மோதல்

    ரஃபி பெரிய சிறிய இசையமைப்பாளர்கள் எனப் பாராமல் புதுமுக இசை இயக்குனர்களுக்காகவும் பாடினார். தயாரிப்பாளர்களுக்கு நிதி உதவி செய்வதிலும், திரைத்துறையில் பலருக்கும் பண உதவி செய்துள்ளார் ரஃபி. சிலரிடம் பணம் வாங்காமலேயே பாடி கொடுத்ததும் உண்டு. அதேபோல் பாடகர்களுக்கு ராயல்டி தொகை வேண்டும் என லதா மங்கேஷ்கர் கோரிக்கை வைத்தபோது அதை ரஃபி ஏற்க மறுத்துவிட்டார். பாடுகிற பாடலுக்கு பணம் வாங்கிக்கொண்டு பாடுகிறோம் அத்துடன் நம் வேலை முடிந்துவிட்டது, லாபம் நஷ்டம் தயாரிப்பாளரை சார்ந்தது, அவர் ரிஸ்க் எடுக்கிறார் ஆகவே கேட்பது சரியல்ல என வாதம் வைத்தார். இதனால் லதா-ரஃபி இடையே மனக்கசப்பு உருவானது.

    இரண்டாம் முறை தேசிய விருது இதுவும் அழகான அழுகை பாட்டுத்தான்

    இரண்டாம் முறை தேசிய விருது இதுவும் அழகான அழுகை பாட்டுத்தான்

    1970 களில், ரஃபி நீண்ட காலமாக தொண்டை நோய்த்தொற்றால் அவதிப்பட்டார். அதனால் அவர் பாடல்கள் பாடுவதை வெகுவாக குறைத்துக்கொண்டார். பாடல்கள் குறைவாக இருந்தபோதிலும், பல பாடல்கள் சிறப்பாக அமைந்தது. இந்த நேரத்தில் முக்கிய பாலிவுட் பின்னணிப் பாடகராக கிஷோர் குமார் முன்னுக்கு வந்ததும் ரஃபிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னர் 1970 களின் பிற்பகுதியில் ரஃபி மீண்டும் விஸ்வரூபமெடுத்தார். ரிஷி கபூருக்கு அவர் குரல் வெகுவாக பொருந்தியதால் அவரது பல படங்களுக்கு பாடல் பாடினார். 1977 ஆம் ஆண்டில், ஆர்.டி. பர்மன் இசையமைத்த ஹம் கிசிசே கம் நஹீன் திரைப்படத்தின் "க்யா ஹுவா தேரா வாதா" பாடலுக்காக பிலிம்பேர் விருது மற்றும் தேசிய விருது இரண்டையும் வென்றார்.

    1980 களில் தொடர்ந்த ஆதிக்கம்

    1980 களில் தொடர்ந்த ஆதிக்கம்

    1970-களின் பிற்பகுதியிலும் 1980 களின் முற்பகுதியிலும் ரஃபியின் வெற்றிப்பயணம் தொடர்ந்தது. பல வெற்றிப் படங்களுக்காகப் பாடினார். குர்பானி (1980) ஆகியவை இதில் அடங்கும். ), தோஸ்தானா (1980), கார்ஸ் (1980), தி பர்னிங் ரயில் (1980), அப்துல்லா (1980), ஷான் (1980), ஆஷா (1980), ஆப் தோ ஐஸ் நா தி (1980), நசீப் (1981) மற்றும் ஜமானே கோ திகானா ஹை (1981) என தொடர்ந்து அற்புதமான பாடல்கள் இப்படங்களில் பாடினார்.

    மறைவுக்குப் பின்னரும் வெளியான சிறப்பான பாடல்கள்

    மறைவுக்குப் பின்னரும் வெளியான சிறப்பான பாடல்கள்

    அதன் பல வெற்றிப் பாடல்கள் 70களின் பிற்பகுதியில் விவித் பாரதி, பினாகா கீத்மாலா மற்றும் ரேடியோ சிலோன் போன்ற வானொலி நிகழ்ச்சிகளில் தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தின.[41] பிரதிக்யா (1975), பைராக் (1976), அமானத் (1977), தரம் வீர் (1977), அப்னாபன் (1977), கங்கா கி சவுகந்த் (1978), சுஹாக் (1979), சர்கம் (1979), குர்பானி (1980) ஆகியவை இதில் அடங்கும். ), தோஸ்தானா (1980), கார்ஸ் (1980), தி பர்னிங் ரயில் (1980), அப்துல்லா (1980), ஷான் (1980), ஆஷா (1980), ஆப் தோ ஐஸ் நா தி (1980), நசீப் (1981) மற்றும் ஜமானே கோ திகானா ஹை (1981).

    கின்னஸ் உலக சாதனை சர்ச்சை

    கின்னஸ் உலக சாதனை சர்ச்சை

    ரஃபி லதா மோதல் கின்னஸ் உலக சாதனையிலும் அதிகமானது. 25,000 க்கும் உட்பட்ட பாடல்களை பாடியதாக லதாஅ மங்கேஷ்கரின் பெயர் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றது. தாம் 25000 க்கு மேல் 26000 பாடல் வரை பாடியதாகவும் லதாவின் சாதனை பதிவு செல்லாது என கின்னஸ் உலக சாதனை புத்தகத்திற்கு 1977 ஆம் ஆண்டு ரஃபி கடிதம் எழுதினார். இது சர்ச்சையாகவே தொடர்ந்தது. அதன் ரஃபியின் மறைவுக்கு பின்னர் லதா பல ஆண்டுகள் பாடிய நிலையில் அவர் பெயர் இடம் பெற்றிருந்தது. பின்னர் 2011 ஆம் ஆண்டு ஆஷா போன்ஸ்லே அதிக பாடல்கள் பாடியவராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

    கந்தர்வ குரலோன் குரலுக்கு திரும்பாத ஓய்வு

    கந்தர்வ குரலோன் குரலுக்கு திரும்பாத ஓய்வு

    1980 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி இரவு முகமது ரஃபி, லக்ஷ்மிகாந்த்-பியாரேலால் இசையில் ரஃபி கடைசியாகப் பாடிய பாடல் ஆஸ் பாஸ் படத்திற்காக பாடல் பதிவை முடித்து கிளம்பிய சிறிது நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு தனது 55 வது வயதில் காலமானார். ரஃபி மறைவு இந்தியா முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது இறுதி ஊர்வலத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். அவரது நினைவாக இந்திய அரசு இரண்டு நாள் பொது துக்கத்தை அறிவித்தது.

    பாடகர்களின் இன்ஸ்பிரேஷன் முகமது ரஃபி

    பாடகர்களின் இன்ஸ்பிரேஷன் முகமது ரஃபி

    ரஃபியின் பாடும் பாணி மகேந்திர கபூர், முகமது அஜீஸ், ஷபீர் குமார், எஸ்.பி.பாலசுப்ரமணியம், உதித் நாராயண் மற்றும் சோனு நிகம் போன்ற பாடகர்களை பாதித்தது. அவரைப்பற்றி எஸ்.பி.பி அடிக்கடி மேடையில் குறிப்பிடுவார். ரஃபிக்கு பாரத ரத்னா விருது வழங்கும்படி பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். என்னதான் மோதல் என்றாலும் லதா மங்கேஷ்கர், "ரஃபி பையா இந்தியாவின் சிறந்த பின்னணிப் பாடகர் மட்டுமல்ல, அற்புதமான மனிதர்" என்று தெரிவித்துள்ளார். ​​"கடவுளின் குரல் யாருக்காவது இருந்தால் அது முகமது ரபிதான்" என்று பிரபல இசையமைப்பாளர், படத்தயாரிப்பாளர் மன்மோகன் தேசாய் ரஃபியின் குரல் பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிட்டதே இங்கு குறிப்பிட சரியாக இருக்கும்.

    100 ஆண்டுகளின் இசை நாயகன் ரஃபி - பிபிசி தேர்வு

    100 ஆண்டுகளின் இசை நாயகன் ரஃபி - பிபிசி தேர்வு

    இந்தி சினிமாவின் 100 ஆண்டுகளை நினைவுகூரும் பிபிசி ஏசியா நெட்வொர்க் வாக்கெடுப்பில் ரஃபியின் பஹாரோன் பூல் பர்சாவோ மிகவும் பிரபலமான ஹிந்தி பாடலாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 2013 இல் CNN-IBN கணக்கெடுப்பில், ஹிந்தி சினிமாவின் மிகச்சிறந்த குரலாக ரஃபியின் குரல் தேர்ந்தெடுக்கப்பட்டது. இது தவிர இன்றளவும் ரஃபியின் தாக்கம் இந்தி சினிமாவின் பாடல்களில் உள்ளது. அவரது தனித்துவமான மென்மை கலந்த கம்பீர குரல் யாராலும் மறக்க முடியாத ஒன்று. நாட்டுப்பற்று, சோகம், காதல், வீரம், சந்தோஷம் என ரஃபி ரசிகர்கள் மனதில் தினம் தினம் ஒலித்துக்கொண்டுத்தான் இருக்கிறார்.

      English summary
      July 31 is the memorial day of Mohammed Rafi, the owner of the Gandharva voice, as the famous director said that if you ask for God's voice, it will be like Rafi's voice.
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X