மோகன், பிரசாந்த் ரொம்பவே உஷார்.. மாட்டிக்கிட்டு முழிக்கப் போவது விஜய் தானா?.. அதான் மேட்டரா?
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் பல ஆண்டுகளாக நடிக்காத நடிகர்களான மோகன் மற்றும் பிரசாந்தை களமிறக்க வெங்கட் பிரபு ஐடியா சொல்லும் போது, சந்தோஷத்துடன் சம்மதித்த விஜய்க்கு தற்போது சங்கடம் கொடுக்கும் விதமாக மோகன் மற்றும் பிரசாந்த் நடந்துக் கொண்டதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
வெள்ளி விழா நாயகனாக கொண்டாடப்பட்ட மோகன் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தற்போது சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார். இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் வெளியான ஹரா திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. அதன் பின்னர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் வெளியானது.

அடுத்து பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் திரைப்படமும் விரைவில் வெளியாக காத்திருக்கிறது. ஹரா படத்தைத் தொடர்ந்து பிரசாந்தும் கோட் படத்துக்கு முன்னதாக முந்திக் கொண்டு படத்தை வெளியிடுகிறார்.
மோகனின் ஹரா: விஜய் ஸ்ரீ இயக்கத்தில் மோகன் நடிப்பில் வெளியான ஹரா திரைப்படம் மகாராஜா படத்தின் கதை போலவே மகளின் மரணத்திற்கு பழி வாங்க ஒரு தந்தை எந்த அளவுக்கு வேண்டுமானால் செல்வார் என்கிற கதையாகவே உருவாகியிருக்கும். மோகனை பல ஆண்டுகாலம் கழித்து மீண்டும் திரையில் அவரது ரசிகர்கள் ஆர்வமாக பார்த்தனர்.
அந்தகன் ரிலீஸ் தேதி மாற்றம்: மோகனை தொடர்ந்து பிரசாந்தும் தனது அந்தகன் படத்தை கோட் படத்திற்கு முன்னதாக வெளியிட திட்டமிட்டுள்ளார். ஆகஸ்ட் 15ம் தேதி படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், சியான் விக்ரமின் தங்கலான் உடன் பிரசாந்த் படம் மோதுகிறது என பெரிய சர்ச்சை ஓடிக் கொண்டிருந்த நிலையில், சட்டென உஷாரான பிரசாந்த் ஆகஸ்ட் 9ம் தேதியே படத்தை ரிலீஸ் செய்யப் போகிறேன் என அறிவித்துள்ளார்.
பாவம் விஜய்: மோகன் மற்றும் பிரசாந்தின் கிரேஸை யூஸ் பண்ணிக் கொள்ள விஜய் நினைத்த நிலையில், விஜய்யின் கிரேஸை அந்த இருவரும் பயன்படுத்திக் கொண்டு கோட் படத்திற்கு முன்னதாகவே தங்கள் படங்களை உஷாராக வெளியிட்டு விட்டதாக கூறுகின்றனர். மேலும், ஹரா மற்றும் அந்தகன் படங்களின் ரிலீஸ் மற்றும் அந்த படங்களுக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸ் அடுத்து செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ள விஜய்யின் கோட் படத்திலும் எதிரொலிப்பது கன்ஃபார்ம் என்கின்றனர். எப்படி இருந்தாலும், தளபதி விஜய்யின் படம் தாறுமாறாக இருக்கும் என்றும் இல்லையென்றாலும், ரசிகர்கள் படத்தை வசூல் ரீதியான வெற்றிப் படமாக மாற்றி விடுவார்கள் என்பதும் தனிக்கதை. பிரபுதேவா மற்றும் அஜ்மல் படங்கள் ஏதாவது அதற்கு முன்னதாக வெளியாகிறதா?


Click it and Unblock the Notifications











