தூய்மை இந்தியா: மோகன் பாபு அழைப்பை ஏற்பாரா ரஜினி?
பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து செயல்பட வருமாறு ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார் அவரது நெருங்கிய நண்பரான மோகன் பாபு.
பிரதமரின் இந்தத் திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் இணைந்து வருகின்றனர். மோடியால் இந்தத் திட்டத்துக்கு அழைக்கப்பட்ட விஐபிக்களில் ஒருவரான நடிகர் கமல் ஹாஸன் நடிகர் கமலஹாசன் இத்திட்டத்தில் சேர்ந்து சமீபத்தில் மாடம்பாக்கம் ஏரியை சுத்தம் செய்தார். இதில் அவரது ரசிகர்களும் பங்கேற்றனர்.

சமந்தா
நடிகை சமந்தாவும் இதில் இணைந்து குப்பை அள்ளினார். ஹைதராபாத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று பள்ளி வளாகத்தில் குவிந்திருந்த குப்பைகளை சுத்தம் செய்தார்.

தமன்னா
நடிகை தமன்னா இந்தத் திட்டத்தில் இணைந்து தெருவோரம் கிடந்த குப்பைக் கழிவுகளை துடைப்பம் கொண்டு அகற்றினார்.

அமலா
தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவும் மனைவி அமலாவுடன் இணைந்து துடைப்பம் ஏந்தி தெருக்களில் குப்பைகளைக் கூட்டி சுத்தம் செய்தார்.

மோகன் பாபு
தெலுங்கு நடிகர் மோகன்பாபுவும் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார். தெரு தெருவாக துடைப்பத்துடன் சென்று குப்பைகளை கூட்டி சுத்தம் செய்தார். அவருடன் ஏராளமான ரசிகர்களும் சேர்ந்து குப்பை அள்ளினார்கள்.

சுமலதா
மோகன்பாபுவின் மகன் விஷ்ணு, மகள் லட்சுமி மஞ்சு, பழைய நடிகை சுமலதா ஆகியோரும் இணைந்து குப்பை அள்ளினார்கள்.

ரஜினிக்கு அழைப்பு
பின்னர் மோகன்பாபு தூய்மை இந்தியா திட்டத்தில் இணையுமாறு ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்தார். ரஜினியும் மோகன்பாபுவும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வருவாரா?
மோகன்பாபு அழைப்பை ரஜினி ஏற்று தூய்மை இந்தியா பணியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச பட விழாவில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பியதும் இதுகுறித்து அவர் பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சல்மான் அழைப்பைக் கண்டுகொள்ளவில்லை
ஏற்கெனவே தூய்மை இந்தியா திட்டத்தில் இணையுமாறு ரஜினிக்கு நடிகர் சல்மான்கான் வேண்டுகோள் விடுத்தார். அதை ரஜினி கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











