அரசுக்கு எதிராக போராடிய பிரபல நடிகர்... வீட்டு காவலில் வைக்கப்பட்ட ரஜினி நண்பர்!

ஆந்திர அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்த பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சென்னை: பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் மோகன் பாபு. இவர் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். இவருடைய படங்களில் நடிகர் ரஜினி கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

Mohan babu kept under house arrest

நடிகர் மோகன் பாபு திருப்பதியில் ஒரு பொறியியல் கல்லூரி நடத்தி வருகிறார். ஆந்திராவில் இந்த கல்லூரி மிகவும் பிரபலமானது. இந்நிலையில் கல்வி கட்டண பிரச்சினை தொடர்பாக ஆந்திர அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என மோகன் பாபு அறிவித்தார்.

தனது கல்லூரி மாணவர்களுடன் வீதியில் இறங்கி போராட மோகன் பாபு திட்டமிட்டிருந்தார். தற்போது நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மோகன் பாபுவை ஆந்திர போலீசார் வீட்டு காவலில் வைத்துள்ளனர்.

மேலும், அவரது கல்லூரிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டத்தில் குதிக்காமல் தடுப்பதற்காக, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X