சூர்யாவின் 'சூரரைப்போற்று' படத்தில் சொந்தப் பெயரில் வரும் மோகன்பாபு... இதுதான் அவர் நிஜப்பெயராமே!

By

சென்னை: சூர்யாவின் சூரரைப் போற்றுப் படத்தில் தனது ஒரிஜினல் பெயரிலேயே நடிகர் மோகன்பாபு நடிக்கிறார்.

Recommended Video

Cobra First Look Breakdown | Vikram | 23 Years of Yuvanism

நடிகர் சூர்யா நடித்துள்ள படம், சூரரைப்போற்று. இதில் அவர் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். மற்றும் ஜாக்கி ஷெராப், கருணாஸ், காளிவெங்கட் உட்பட பலர் நடிக்கின்றனர்.

முதன் முதலில் ஏழைகளும் பறக்கலாம் என்று பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய, ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் இது.

விமானத்தில்

விமானத்தில்

படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே துரோகி, இறுதிச்சுற்று ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். விமானம் தொடர்பான கதை என்பதால், விமானத்தில் சுமார் 15 நாள் ஷூட்டிங் நடந்துள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வழங்கும் இந்தப் படத்தின் ஒரு பாடல் வெளியீட்டு விழா, ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நடந்தது.

சினிமா வாழ்க்கையில்

சினிமா வாழ்க்கையில்

படத்தின் பாடல்களில் ஒன்றான 'வெய்யோன் சில்லி'யை ஸ்பைஸ்ஜெட் நிறுவன தலைவர் அஜய் சிங் மற்றும் படத்தின் ஹீரோ சூர்யா இருவரும் வெளியிட்டனர். இதுகுறித்து நடிகர் சூர்யா கூறும்போது, எனது 20 வருட சினிமா வாழ்க்கையில் இந்தப் படத்தை முக்கியமானதாகக் கருதுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

மோகன்பாபு

மோகன்பாபு

இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் நண்பரான இவர் தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அவர் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு வழிகாட்டியாக நடிக்கிறார்.

ஒரிஜினல் பெயர்

ஒரிஜினல் பெயர்

இந்தப் படத்தில் அவரது பெயர் பக்தவத்சலம் நாயுடு. இதுதான் அவரது ஒரிஜினல் பெயர். அந்தப் பெயரிலேயே அவர் நடிக்கிறார். படத்துக்கான தமிழ் டப்பிங்கை அவரே பேசியுள்ளார். இந்த தகவலையும் அவரது போட்டோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் தெலுங்கில் ஆகாசம் நீகத்துரா என்ற பெயரில் வெளியாக உள்ளது. ஏப்ரல் மாதம் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X