அந்த ஹீரோயின் நாடக காதலால் பாதிக்கப்பட்டார்.. இப்படியும் நடந்ததா?.. மோகன் ஜி பேச்சால் பரபரப்பு
சென்னை: மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரௌபதி 2 திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி ப்ரொமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. இயக்குநர் மோகனும் அதில் கலந்துகொண்டு ஏராளமான விஷயங்களை பேசிவருகிறார். அந்தவகையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திரௌபதி படத்தில் ஹீரோயினாக நடித்த ஷீலா பற்றி பேசியிருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கி திரைத்துறைக்குள் வந்த மோகன் ஜி; திரௌபதி, பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். அவரது படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்படுகிறதோ இல்லையோ ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்திக்கும். திரௌபதி படத்தில் எல்லாம் அவர் வைத்த காட்சிகள் பெரிய பேசுபொருளாகின. முக்கியமாக விசிக தலைவர் திருமாவளவனை எல்லாம் நேரடியாக தாக்கும்படி காட்சிகள் வைத்திருந்தார்.
திரௌபதி 2: இப்போது அவர் திரௌபதி 2 படத்தை இயக்கியிருக்கிறார். இதிலும் ரிச்சர்ட்தான் ஹீரோ. நட்டி உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களை ஏற்றிருக்கிறார்கள். முதல் பாகம் எப்படி சர்ச்சையை சந்தித்ததோ அதேபோல் இதுவும் சர்ச்சையை சந்திக்குமா இல்லை சுமூகமாக போய்விடுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சின்மயி விவகாரத்திலேயே இந்தப் படம் ரிலீஸுக்கு முன்பே சர்ச்சையை சந்தித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன ஆனது?: அதாவது இப்படத்தில் ஒரு பாடலை சின்மயி பாடியிருக்கிறார். ஆனால் பாடும்போது அந்தப் பாடல் திரௌபதி 2வுக்காக பதிவு செய்யப்படுகிறது என தெரியவில்லை. எனது கொள்கைகளுக்கு முரணான படத்தில் பாடியதை நினைத்து வருந்துகிறேன் என கூறியிருந்தார். இதனால் கடுப்பான மோகன் ஜி, 'யார் சின்மயிக்கு அழுத்தம் கொடுத்தது. அவர் வருத்தம் தெரிவித்ததற்கான காரணத்தை சொல்ல வேண்டும். பதிவையும் நீக்க வேண்டும்' என கூறியிருந்தார்.
ஷீலாவும் அப்படி: இதற்கிடையே திரௌபதி படத்தில் ஹீரோயினாக நடித்த ஷீலா; சில வருடங்களுக்கு முன்பு கொடுத்திருந்த ஒரு பேட்டியில், 'திரௌபதி படத்தின் கதையை என்னிடம் வேறு மாதிரி சொன்னார்கள். அதை நம்பித்தான் நடித்தேன். ஏன் அந்தப் படத்தில் நடித்தோம் என வருந்துகிறேன். அது ஒரு கெட்ட கனவு' என தெரிவித்திருந்தார். இப்படி மோகன் படத்தில் பணியாற்றியவர்கள் சிலர் வருத்தம் தெரிவிப்பது கடந்த சில வருடங்களாக நடந்துவருகிறது. இந்நிலையில் ஷீலாவின் அந்தப் பேட்டி பற்றி மோகன் ஜி இப்போது மௌனம் கலைத்திருக்கிறார்.
மோகன் சொன்னது என்ன?: அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "திரௌபதி படத்தின் முழு கதையையும் கேட்டுவிட்டுத்தான் ஷீலா அந்த படத்தில் நடிக்க வந்தார். அந்த படத்தில் அவர் நடிக்க சம்மதம் தெரிவிக்க முக்கிய காரண்மே படத்தில் வரும் ஹீரோயினுக்கு மாதிரி அவரும் நிஜ வாழ்க்கையில் நாடக காதலால் பாதிக்கப்பட்டவர். படத்தில் நடிக்கும்போது அவர் எதுவும் சொல்லவில்லை. ஆனால் படத்தில் நடித்த பிறகு நிறைய அழுத்தம் வந்தது. படத்தில் நடித்தது கெட்ட கனவு என அவர் சொன்னது கஷ்டமாகிவிட்டது" என்றார். திரௌபதி 2 படம் நாளை திரையரங்குகளில் ரிலீஸாகிறது.


Click it and Unblock the Notifications











