Mohan G - என்னது என் நம்பரை ஃபகத் பாசில் ப்ளாக் செய்தாரா?.. மோகன் ஜி கொடுத்த விளக்கம்

சென்னை: Mohan G (மோகன் ஜி) தன்னுடைய நம்பரை நடிகர் ஃபகத் பாசில் ப்ளாக் செய்துவிட்டதாக வெளியான தகவலுக்கு மோகன் ஜி விளக்கமளித்திருக்கிறார்.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது பகாசூரன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் செல்வராகவன், நட்டி, மன்சூர் அலிகான், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

Mohan G has clarified the news that his number has been blocked by actor Fahadh Faasil

சர்ச்சைகள்: மோகன் ஜி முதல் முதலில் இயக்கிய பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படம் பெரிதாக யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் அதன் பிறகு அவர் இயக்கிய திரௌபதி திரைப்படம் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் உருவாக்கியது. நாடக காதல் என்ற பதத்தை வைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது மோகன் ஜி தாக்குதல் நடத்தியிருக்கிறார் என்று கண்டனங்களும் குவிந்தன. மேலும் படத்தில் நடித்த கதாநாயகியும் அந்தப் படத்தில் நடித்தது தொடர்பாக வருத்தமும் தெரிவித்திருந்தார்.

ருத்ரதாண்டவம்: அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய படம் ருத்ரதாண்டவம். இந்தப் படத்தில் ரிச்சர்ட், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். திரௌபதி போலவே இந்தப் படமும் விவாதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும், அக்கட்சியின் தலைவர் திருமாவளவனையும் மோகன் ஜி வம்புக்கு இழுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி சிறுபான்மையினர் மதத்தையும் சீண்டியிருக்கிறார் என பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் மோகன் ஜிக்கு கருத்து சுதந்திரம் இருப்பதாகவும் ஒரு தரப்பினர் குரல் எழுப்பினர்.

பகாசூரன் : இந்தச் சூழலில் அவர் கடைசியாக இயக்கிய பகாசூரன் படமும் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. ஸ்மார்ட் ஃபோனால் வரும் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு கொடுக்கிறேன் என்ற பெயரிலும், பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் பேசுகிறேன் என்ற பெயரிலும் மோகன் ஜி பிற்போக்குத்தனமாக படத்தை எடுத்துவைத்திருக்கிறார்.

குறிப்பாக நடக்கும் தவறுகளுக்கு எல்லாம் பெண்கள் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துவதும், கல்லூரிக்கு செல்வதும்தான் காரணம் என பதிவு செய்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களை திருந்த சொல்கிறாரே தவிர பாதிப்பு ஏற்படுத்தியவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார் எனவும் பலர் கூறிவருகின்றனர். அடுத்ததாக அவர் ரிச்சர்டை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார். பணிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன.

ப்ளாக் செய்தார்: இந்தச் சூழலில் ஃபகத் பாசிலிடம் இயக்குநர் மோகன் ஜி கதை சொல்ல முயன்றதாகவும்; உடனடியாக அவரது நம்பரை ஃபகத் ப்ளாக் செய்துவிட்டார் என்றும் வார பத்திரிகை ஒன்றில் வந்தது. இதற்கு விளக்கம் அளித்திருக்கும் மோகன் ஜி, "பத்திரிகையில் இப்படி வந்தது பொய். தவறானது. இப்போது கிண்டல் செய்திருக்கும் இதே பத்திரிகையில் நான் ஃபகத் பாசிலை வைத்து படம் இயக்குகிறேன் என்ற செய்தியை வரவைக்கிறேன்" என சவால் விட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X