சூர்யா பற்றி இனிமேல் பேசவேமாட்டேன்.. அதிரடி முடிவெடுத்த இயக்குநர் மோகன் ஜி

சென்னை: தமிழ் திரைப்பட துறையில் சர்ச்சைக்குரிய இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் மோகன் ஜி. கடைசியாக அவரது இயக்கத்தில் திரௌபதி 2 படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இதற்கிடையே ஜெய் பீம் படம் வெளியானதிலிருந்து நடிகர் சூர்யா பற்றி அவ்வப்போது அவர் கூறிய சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில் அந்த விஷயம் பற்றி சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார் மோகன்.

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கி தனது திரை பயணத்தை தொடங்கிய மோகன் ஜி இதுவரை ஒரு வெற்றி படத்தைக்கூட கொடுத்ததில்லை. மாறாக அவர் இயக்கிய திரௌபதி, ருத்ரதாண்டவம், பகாசூரன் ஆகிய படங்கள் எல்லாம் கடுமையான சர்ச்சையை கிளப்பின. குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக வேண்டுமென்றே அவர் காட்சிகள் வைப்பதாகவும்; அவர் வலதுசாரி சிந்தனையாளர் என்றும் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

பா.இரஞ்சித்துக்கு எதிராக: குறிப்பாக இயக்குநர் பா. இரஞ்சித்துக்கு எதிராகவும் காட்டமான கருத்துக்களை முன்வைப்பவர் அவர். சமீபத்தில் கூட, 'கோயிலுக்கு சென்றால் எனது கைகளை பிடித்து நேராக சாமி தரிசனம் செய்ய அழைத்து செல்வார்கள். தென் மாவட்டங்களில் வீட்டில் இலை போட்டு சோறு போடுவார்கள். இதெல்லாம் இரஞ்சித்துக்கு கிடைக்குமா' என்று கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohan G on Suriya Controversy I Won t Talk About Him Anymore
Photo Credit:

திரௌபதி 2: இது ஒருபக்கம் இருக்க கடைசியாக அவரது இயக்கத்தில் திரௌபதி 2 படம் வெளியானது. இந்தப் படத்தோடு மங்காத்தா படமும் ரீ ரிலீஸானது. அப்படம் ரீ ரிலீஸானதால் தனது படத்துக்கு கூட்டமே இல்லை என்றும்; கஷ்டப்பட்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். மக்களிடம் இப்படம் சென்று சேர வேண்டும் என்று பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். அவர் வீடியோ வெளியிட்டும் படம் பெரிய அளவில் செல்ஃப் எடுக்கவில்லை. படுதோல்வியைத்தான் சந்தித்தது.

சூர்யா பற்றி: இதற்கிடையே ஜெய் பீம் பட ரிலீஸான சமயத்தில் குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக காட்சியை வேண்டுமென்றே வைத்திருக்கிறார்கள் என சர்ச்சை கிளம்பியது. அப்போதிருந்து சூர்யாவை கடுமையாக விமர்சனம் செய்து பேசிவந்தார் மோகன் ஜி. இந்நிலையில் சமீபத்தில் கொடுத்த பேட்டியில், "பா.இரஞ்சித் இயக்கிய வேட்டுவம் படத்தில் ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் உயிரிழந்தார். பா.இரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அனுபவம் வாய்ந்த கலைஞர்களை வைத்து போதுமான ஏற்பாடுகளோடுதான் ஸ்டண்ட் சீன்களை எடுக்கிரார்கள். அதையும் மீறி நடந்திருப்பது விபத்து என ரஞ்சித்துக்கு ஆதரவாக பதிவிட்டேன்.

அதையும் விமர்சித்தார்கள்: அதையும் விமர்சித்து சிலர் கமெண்ட் செய்தார்கள். எனவே அப்பதிவை நான் நீக்கிவிட்டேன். இதற்கு பிறகு அக்‌ஷய் குமார் தனது படங்களில் பணியாற்றும் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு காப்பீடு வசந்தி செய்து கொடுத்திருப்பதாக பகிர்ந்தேன். அதை பார்த்துவிட்டு சூர்யாவும் அப்படி செய்திருப்பதாக பலரும் சொன்னார்கள். ஆனால் யூனியனில் விசாரித்தபோது அதற்கான வசதிகள் இங்கே இல்லை என்றும்; சூர்யா அப்படி எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார்கள். அதைத்தான் நான் வெளிப்படுத்தினேன். உடனே ஜெய் பீம் படத்தில் இருந்த காலண்டர் சீனை மனதில் வைத்துதான் இப்படி பேசினேன் என விமர்சித்தார்கள். இனிமேல் சூர்யா பற்றி எதுவுமே பேசமாட்டேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X