கொள்கையெல்லாம் தூக்கிப் போடுங்க.. வெற்றியை மட்டும் பாருங்க விஜய்.. மோகன் ஜியின் உப்புமா கணக்கு!

சென்னை: நடிகர் விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற முடிவுடன் நடிப்பையே விட்டு விட்டு அரசியலில் களம் கண்டு தவெக கட்சியை உருவாக்கியுள்ளார். எங்களுடன் சில பேர் கூட்டணிக்கு வரலாம் இல்லையா? அவங்களை அரவணைச்சு போகணுமில்லையா? என முதல் மாநாட்டில் விஜய் பேசிய நிலையில், பல கட்சிகள் அவருடன் கூட்டணிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பெரிதாக யாருமே விஜய்யுடன் கூட்டணிக்கு வரவில்லை. கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சியும் வலுவான திமுகவையே நம்பி கை கோர்த்து விட்டது.

Mohan G openly asked Vijay to come NDA Alliance for Big Win

இந்நிலையில், விஜய்க்கு ஆரம்பத்தில் இருந்தே வலை வீசி வரும் NDA கூட்டணி தான் ஒரே ஆப்ஷனாக உள்ளது. அதை விடுத்தால் தனித்து நின்று தனது மக்கள் பலத்தை காட்ட வேண்டும். தனித்து நிற்கும் நபரை எந்தளவுக்கு மக்கள் நம்பி வாக்களிப்பார்கள் என்கிற கேள்வியும் அதிகளவில் கிளம்பி உள்ள நிலையில், விஜய்க்கு எதிரான மத்திய அரசின் நெருக்கடிகளும் அதிகரித்து வருகின்றன.

சென்சார், சிபிஐ பிரச்னை: ஜன நாயகன் படத்தை ரிவைசிங் கமிட்டி பார்த்து சென்சார் வழங்கட்டும் என வழக்கை வாபஸ் வாங்கினாலும் அவர்கள் காய்ச்சல் என காரணம் காட்டி கால தாமதம் செய்வதாக குற்றச்சாட்டுக்களை தவெக தரப்பு அடுக்கி வருகிறது. கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணையை விஜய் கேட்ட நிலையில், அவரே வசமாக போய் சிக்கிக் கொண்டார் என்கின்றனர். இப்படி ஒன்றிய அரசிடம் வசமாக விஜய் சிக்கியுள்ள நிலையில், அவரை காப்பாற்றிக் கொள்ளவே அதிமுக மற்றும் பாஜகவின் NDA கூட்டணியில் சேர்வது மட்டுமே ஒரே வழி என்றும் விஜய் சேரப் போகிறார் என்றும் ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெற்றிக் கூட்டணி தான் முக்கியம்: "கொள்கை கூட்டணி என பார்க்காமல் தேர்தல் கூட்டணி என பார்க்க வேண்டும்.. வெற்றி ஒன்றே இலக்காக தெரிய வேண்டும்.. இருக்கும 10 ஓட்டில் இட்லிக்கு 3 ஓட்டும், தோசைக்கு 3 ஓட்டும், உப்புமாவுக்கு மீதம் 4 ஒட்டு விழுந்தால் காலம் முழுக்க நமக்கு உப்புமா தான்.. இதை கருத்தில் கொண்டு துணை முதல்வராகவே அல்லது எதிர்கட்சி தலைவராகவே முதல் தேர்தலிலேயே நல்ல வாய்ப்பு அமைகிறது.. NDA வுடன் இணைந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும் தாவெக கட்சியினர்.. இல்லனா ஓட்டு வரும் ஆனா சீட்டு வராது.." என இயக்குநர் மோகன் ஜி விஜய்க்கு அட்வைஸ் செய்யும் விதத்தில் ட்வீட் போட்டுள்ளார்.

விஜய்யின் முடிவு என்ன?: வெற்றியோ, தோல்வியோ கடைசி வரை மக்களுடன் நின்றே கொள்கை எதிரி என பாஜகவை சொன்னது போலவே அவர்களுடன் கூட்டணி வைக்காமல் விஜய் இந்த தேர்தலை சந்திப்பார் என்றே தவெகவினர் மற்றும் தளபதி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் விஜய் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது சீக்கிரமே தெரிந்து விடும். விஜய்யின் முடிவு வெளியானதுமே தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுக்கிறது. அதிமுகவில் முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வமே திமுகவில் இணைந்த நிலையில், அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்றாகிவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X