பா. ரஞ்சித் எனக்கு பரம்பரை எதிரியா? உடைத்து பேசிய மோகன் ஜி.. டிவிட்டரில் இதை கவனிச்சீங்களா!
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க தமிழ்நாடு அரசியல் களம் பலரும் யூகிக்காத வகையில் மாறிக் கொண்டு உள்ளது. இப்படி இருக்கையில் இயக்குநர் பா. ரஞ்சித் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஆதரவாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது போஸ்ட்டுக்கு நெட்டிசன் ஒருவர் காட்டமாக பதிலடி கொடுக்க, அந்த போஸ்ட்டுக்கு இயக்குநர் மோகன் ஜி தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங். இவரது மரணத்திற்குப் பின்னர் அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்னையால், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அதாவது ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற கட்சியைத் தொடங்கினார். அக்கட்சி, தற்போது நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுகவின் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இணைந்துள்ளது.
மேலும் சென்னை திரு.வி.நகர் தனித் தொகுதியில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஆதரவாக பதிவு ஒன்றைப் பகிர்ந்தார். அதாவது, " எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை
பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்.
கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது.

இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது.
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம்" என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பாக இணையவாசி ஒருவர், " தலித்துக்களை ஒடுக்கக்கூடாது, அவங்களுக்கு அதிகாரம் கிடைக்கணும்னு பேசிட்டு, பாஜகவோட கூட்டணி கட்சிக்கு ஓட்டு கேட்டுட்டு இருக்காரு பா.ரஞ்சித். இதுலே வேடிக்கை என்னனா பா.ரஞ்சித் - மோகன் ஜி ரெண்டு பேரும் ஒரே கூட்டணி ஆதரவாளர்கள்" என்று பதிவிட, அதற்கு மோகன் ஜி தனது ஸ்டைலில் பதில் கொடுத்துள்ளார்.
அதாவது, " காலம் காலமா நீங்க கட்டமைத்த பிம்பம் அது.. நாங்க ரெண்டு பேரும் என்ன பரம்பரை எதிரியா.. சிந்தனை ஒரே இடத்தில் சேரும் போது, இருவரும் ஒருவரை ஆதரிப்பது என்ன தப்பு.. அந்த அம்மையார் வெல்லட்டும். உங்களை வெல்வதே எங்கள் நோக்கம்.. கதறு கதறு"என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த போஸ்ட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











