மசாஜ் பார்லரில் நடக்கும் கூத்து.. அம்பலப்படுத்தக் காத்திருக்கும் மோகன் ஜி.. பகாசூரன் கதை இதுதானாம்!
சென்னை: இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகி வரும் பகாசூரன் திரைப்படத்தின் கதை பற்றி படத்தின் இயக்குநர் அளித்துள்ள பேட்டி டிரெண்டாகி வருகிறது.
பொன்னியின் செல்வன் சர்ச்சை தொடர்பாக மோகன் ஜி சமீபத்தில் பேசிய போது, சோழர்களை போலவே சேரர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் பற்றிய படங்களும் விரைவில் வரும் என்று கூறியிருந்தார்.
மேலும், இந்து மத மக்களின் ஒற்றுமையை கெடுக்கவே இப்படி ராஜ ராஜ சோழன் சைவ மதத்தை மட்டுமே சார்ந்தவர் என்கிற பிரச்சனையை கிளப்புகின்றனர் என்றும் பேசியிருந்தார்.

மோகன் ஜி
நாடக காதல் என்கிற விஷயத்தை திரெளபதி படத்தின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டி இருந்தார் இயக்குநர் மோகன் ஜி. திரெளபதி படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தில் கெளதம் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்நிலையில், பகாசூரன் படத்தை விரைவில் வெளியிட காத்திருக்கிறார்.

செல்வராகவன் நடிப்பில்
செல்வராகவன், நட்டி நட்ராஜ் நடிப்பில் பகாசூரன் திரைப்படம் உருவாகி வருகிறது. பீஸ்ட், சாணிக் காயிதம், நானே வருவேன் படங்களில் தனது நடிப்பு அவதாரத்தை காட்டிய செல்வராகவன் பகாசூரன் படத்தின் டிரைலரில் அதகளம் பண்ணி இருந்தார் என்றே சொல்ல வேண்டும். வரும் நவம்பர் மாதம் பகாசூரன் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ள நிலையில், சமீபத்தில் படத்தின் கதை பற்றி இயக்குநர் மோகன் ஜி அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

மசாஜ் பார்லர்களில் நடக்கும் கூத்து
மசாஜ் பார்லர்கள் மற்றும் ஸ்பா சென்டர்கள் எல்லாம் விபச்சார விடுதிகளாக மாறி வருவதாக ஏகப்பட்ட புகார்கள் கிளம்பி வரும் சூழலில் கல்லூரி படிக்கும் மாணவிகள், வேறு மாநிலங்களில் இருந்து வேலைக்கு வரும் பெண்கள் என பலரும், மசாஜ் பார்லர்களில் எப்படி வந்து சிக்குகின்றனர் என்பதை விரிவாக சொல்லப் போகும் கதைதான் பகாசூரன் படத்தின் கதை என இயக்குநர் மோகன் ஜியே ரிவீல் செய்து விட்டார்.

நட்டி தான் பார்லர் ஓனரா
மசாஜ் பார்லரின் ஓனராக இந்த படத்தில் நட்டி நட்ராஜ் நடித்துள்ளாரா? என்றும் அவரை வேட்டையாடும் நாயகனாக செல்வராகவன் நடித்துள்ளாரா? என்கிற கேள்விகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சமீபத்தில் மன்சூர் அலி கான் நடனமாடிய காத்தம்மா வீடியோ பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











