ருத்ரதாண்டவம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்!
சென்னை: திரௌபதி இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ருத்ரதாண்டவம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய வண்ணாரப் பேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு திரௌபதி படம் வெளியானது.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இயக்குநர் மோகன் ஜியின் அடுத்த படைப்பாக ருத்ர தாண்டவம் படம் உருவாகியுள்ளது.

வழக்கறிஞராக ராதா ரவி
இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் தர்ஷா குப்தா கதாநாயகியாக நடித்துள்ளார். ராதா ரவி வழக்கறிஞராகவும், தம்பி ராமைய்யா, தீபா ஆகியோர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பரபரப்பை கிளப்பும் பல வசனங்கள்
ருத்ர தாண்டவம் படத்தின் ட்ரெயிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் சமூகத்தில் நிலவும் மற்றொரு முக்கிய பிரச்சனை குறித்து பேசப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் மதமாற்றம், சாதி அரசியல் என பரபரப்பை கிளப்பும் பல வசனங்கள் ருத்ர தாண்டவம் படத்தில் இடம் பெற்றுள்ளது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு
ருத்ர தாண்டவம் படத்தின் ட்ரெயிலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ருத்ர தாண்டவம் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

திரெளபதி தாய் மற்றும் ஈசன் துணையுடன்..
இதுகுறித்த அறிவிப்பை இயக்குநர் மோகன் ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது ருத்ர தாண்டவம் படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரை ஷேர் செய்துள்ள மோகன் ஜி, திரெளபதி தாய் மற்றும் ஈசன் துணையுடன் உலகம் முழுவதும் அக்டோபர் 01 முதல் திரையரங்குகளில் ஆட்டம் ஆரம்பம்.. என பதிவிட்டுள்ளார்.

படம் வெற்றி பெற வாழ்த்துகள்
இயக்குநர் மோகன் ஜி யின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ருத்ர தாண்டவம் படம் வெற்றி பெற வாழ்த்துகள் என பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே கிறிஸ்தவர்கள் குறித்த தவறான தகவல்களை ருத்ர தாண்டவம் படத்தில் இயக்குனர் மோகன் ஜி பதிவு செய்திருப்பதாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் சிறுபான்மை மக்கள் நல கட்சியினர் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











