தாலியே தேவையில்ல..லிவிங் வாழ்க்கையில் குழந்தை பெத்துக்கலாம்.. சத்யராஜின் கருத்தை கண்டித்த மோகன் ஜி!

சென்னை: திமுக நிர்வாகியும், ஊட்டச்சத்து நிபுணருமான சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை, திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என பேசி இருந்தார். இது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தனது மகளின் கருத்துடன் தானும் உடன்படுகிறேன். எனக்கு சாதி, மதம், சடங்கு உள்ளிட்டவற்றில் உடன்பாடே கிடையாது. அதேபோல், திருமணம் என்பது கட்டாயம் கிடையாது நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

மோகன் ஜி வீடியோ: இதை வன்மையாக கண்டித்த இயக்குநர் மோகன் ஜி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கடந்த இரண்டு நாட்களாக தேர்தல் குறித்து பேசப்பட்ட விஷயங்களைத் தாண்டி, திவ்யா சத்யராஜ் பேசிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலானது. திவ்யா பேசியது பெரிய அளவில் வைரலாகவில்லை. ஆனால், மகளின் கருத்துக்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் பேசியது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Sathyaraj Mohan G
Photo Credit:

பெரியாரின் கொள்கை தெரியாது: அவரது பேச்சு எளிதில் கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்து இருக்கும். சத்யராஜ் சார் நீங்க பெரியாரிஸ்ட் என்பது 90-களில் பிறந்தவர்களுக்கு தெரியும். ஆனால், ஜென்ஸிகளுக்கு நீங்க பெரியாரிஸ்ட் என்று தெரியாது பெரியாரின் கொள்கை என்ன என்று கூட தெரியாது. அப்படி இருக்கும் போது நீங்களும், உங்களுடைய மகள் சொன்ன கருத்து தப்பானது. லிவிங் ரிலேஷன் ஷிப் வாழ்க்கை தவறு இல்லை. தாலி, மோதிரம் போன்ற எந்த சடங்குகள் இல்லாமல், பெற்றோர் சம்மதம் இன்றி லிவிங் ரிலேஷன் ஷிப்பில் வாழ்த்து குழந்தை பெற்றுக் கொள்வதும் தவறல்ல என்று சொல்லி இருக்கிறீர்கள் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நீங்க ஏசி அறையில் உங்காந்து கொண்டு எதுவேண்டுமானாலும் பேசலாம். உங்களுக்கு பேங்க் பேசலன்ஸ் இருக்கு சொத்து இருக்கு என்பதால் இது எல்லாம் உங்களுக்கு சாத்தியாம்.

கண்டிக்கிறேன்; ஆனால், சாதாரண மக்களுக்கு இது பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி விடும், திருமணம் இல்லாமல் உறவில் இருந்து குழந்தை பெற்றுக் கொண்டு, பின் பிரிவு ஏற்பட்டால், அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும். குழந்தையை தனியாக வளர்ப்பது எவ்வளவு கடினம் என்பதை அந்த நிலையை எதிர்கொண்ட பெண்களிடம் கேட்க வேண்டும். இளைஞர்களே தயவு செய்து இதுபோன்ற பேச்சை கேட்டு பாதைமாறிவிடாதீர்கள் என மோகன் ஜி அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X