மோகன்லாலுடன் ஆட்டம் போட்ட அக்‌ஷய் குமார்... அதுவும் இப்படியொரு ஸ்டெப்பா... இவ்ளோ ரிஸ்க் தேவையா..?

ஜெய்ப்பூர்: பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி பிளஸ்ஸின் இந்திய தலைவராக பதவி வகித்து வருபவர் மாதவன்.

அவரது மகன் கெளதம் மாதவனுக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன், மோகன்லால், அமீர்கான், அக்‌ஷய் குமார், பிருத்விராஜ், கரன் ஜோஹர், உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

 பிரபலங்கள் கலந்துகொண்ட திருமண விழா

பிரபலங்கள் கலந்துகொண்ட திருமண விழா

உலகளவில் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ், இந்தியாவிலும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஓடிடி தளத்தின் இந்திய பிரிவு பிரசிடெண்டாக பதவி வகித்து வருபவர் மாதவன். அவரது மகன் கெளதம் மாதவனுக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் திருமணம் நடைபெற்றது. இதில் இந்திய திரையுலகின் ஜாம்பாவன்களான கமல்ஹாசன், மோகன்லால், அமீர்கான், அக்‌ஷய் குமார், கரன் ஜோஹர், பிருத்விராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மோகன்லால் - அக்‌ஷய்குமார் ஆட்டம்

மோகன்லால் - அக்‌ஷய்குமார் ஆட்டம்

நடிகர் கமல்ஹாசன் தமிழ்நாட்டு பாரம்பரியமான வேஷ்டி சட்டையில் செம்ம மாஸ்ஸாக கலந்துகொண்டார். அதேபோல் அக்‌ஷய் குமார், மோகன்லால் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் டிரெடிஷன் லுக்கில் பங்கேற்றனர். அப்போது மோகன்லாலும் அக்‌ஷய்குமாரும் ஜோடியாக நடனமாடி அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். பஞ்சாபி ஸ்டைல் நடனமான பாங்க்ரா இசைக்கு இருவரும் கால்களை இணைத்து ஆடியது குறிப்பிடத்தக்கது. இதனை கரன் ஜோஹர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 மறக்க முடியாத ஆட்டம்

மறக்க முடியாத ஆட்டம்

மோகன்லாலுடன் ஆட்டம் போட்ட வீடியோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள அக்‌ஷய்குமார், இந்த ஆட்டத்தை என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன், இது எப்போதுமே எனக்கு நினைவில் இருக்கும் ஆட்டம் என குறிப்பிட்டுள்ளார். அக்‌ஷய்குமார் நடித்துள்ள செல்ஃபி படத்தில் இருந்து 'வைப்' என்ற பாடல் நேற்று வெளியாகியிருந்தது. அதில், மிருணாள் தாகூருடன் அக்‌ஷய் போட்ட ஆட்டம் இன்னும் ரசிகர்களை வைபில் வைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து மோகனாலுடன் ஆடிய நடனமும் ரசிகர்களை எண்டர்டெயின் செய்துள்ளது.

 மோகன்லால் ட்வீட்

மோகன்லால் ட்வீட்

இதனையடுத்து அக்‌ஷய்குமாரின் ட்வீட்டை ரீடேக் செய்த மோகன்லால், இந்த அற்புதமான ஆட்டம் அக்‌ஷய்குமாருடன் மட்டுமே, இது கெளதம் மாதவன் திருமணத்தில் எடுத்தது என க்யூட்டாக குறிப்பிட்டுள்ளார். மோகன்லால் - அக்‌ஷய்குமார் இருவரது லெக் ஸ்டெப் டான்ஸ் வீடியோ டிவிட்டரில் பயங்கரமாக ட்ரெண்டடித்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இருவரும் ட்வீட் செய்துள்ளதையும் நெட்டிசன்கள் ரீ-ட்வீட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X