பங்க்சுவல், டிஸிப்ளின், கடும் உழைப்பு... இதான் விஜய்! - மோகன் லால் புகழாரம்
நடிகர் விஜய் நிறைய நல்ல குணங்கள் கொண்டவர். நேரம் தவறாமை, ஒழுக்கம், கடும் உழைப்புக்குச் சொந்தக்காரர் என நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.
ஜில்லா படத்தில் விஜய்யுடன் நடித்துள்ள மோகன் லால், பத்திரிகைகளில் அவரைப் பற்றி உயர்வாகப் பேசி வருகிறார்.
ஜில்லா வெளியீட்டையொட்டி சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், விஜய் குறித்த கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் இது:

சின்ன வயசிலேயே
ரொம்ப சின்ன வயசிலேயே பெரிய நட்சத்திரமாகிவிட்டவர் விஜய். ஆனா, அதற்கான எந்த பந்தாவும் இல்லாத மனிதர்.

பங்க்சுவல்-டிஸிப்ளின்
விஜய்யிடம் ஏராளமான நல்ல பழக்கங்கள் உள்ளன. நேரம் தவறாமை, ஒழுக்கம், கடுமையான உழைப்பு.. இதான் விஜய்னு சொல்லலாம். அதனால்தான் அவருக்கு இவ்வளவு ரசிகர் கூட்டம் இருக்கு.

முதல்ல பெரிசா பழகல...
ஆரம்பத்துல நாங்க ரெண்டு பேரும் கூட அவ்வளவா பழகல. அவர் பாட்டுக்கு அவர் இருப்பார். நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்திட்டிருப்பேன். ஆனா போகப் போக இருவரும் பேசி பழக ஆரம்பிச்சோம்.

நாங்க இப்போ நண்பர்கள்...
இப்போ எங்க நட்பு புது உயரத்துக்கு போயிடுச்சி. இருவரும் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் போக ஆரம்பித்துவிட்டோம். குடும்பத்துடன் சேர்ந்து நட்பைக் கொண்டாடுகிறோம். நல்லாருக்கு," என்றார்.


Click it and Unblock the Notifications











