நிர்வாணமாக நிற்பதில் என்ன கஷ்டம்?.. ஆடுஜீவிதம் ஆடியோ லான்ச்சில் லேடி ஆங்கருக்கு மோகன்லால் பதிலடி
திருவனந்தபுரம்: மலையாளத் திரையுலகம் மட்டுமின்றி இந்தியத் திரையுலகமே பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படம் பிளெஸ்ஸி-பிருத்விராஜின் ஆடுஜீவிதம். இந்தப் படம் பென்யாமின் எழுதி 2009ஆம் ஆண்டு கேரள சாகித்திய அகாதெமி விருது வென்ற The Goat's Life நாவலின் தழுவல் ஆகும். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார் பிருத்விராஜுடன் அமலா பால் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படமானது மார்ச் 28ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவிருக்கிறது.
மலையாளத்தில் 2003ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானவர் பிருத்விராஜ். முதல் படத்திலேயே தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டியதன் மூலம் மல்லுவுட்டில் அவருக்கு வாய்ப்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன. வில்லன், கதாநாயகன் என மாறி மாறி பல ரோல்களை செய்தார். தமிழில் அவர் கே.வி.ஆனந்த் இயக்குநராக அறிமுகமான கனா கண்டேன் படத்தில் நடித்து அறிமுகமானார்.

மிரட்டும் வில்லன்: ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்க கோபிகா அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். பிருத்விராஜ் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். வில்லன் என்றாலே தொண்டை கிழிய கத்தி வசனம் பேச வேண்டும் என்ற டெம்ப்ளேட்டை உடைத்து சாந்தமான முகத்தை வைத்துக்கொண்டு பக்குவமான குரலால் பேசி பார்வையால் மிரட்டி வில்லன் ரோலை செய்திருந்தார் பிருத்வி. இதனையடுத்து அவரது நடிப்பு தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றது.
தமிழிலும் வாய்ப்புகள்: கனா கண்டேன் படத்தில் விலல்னாக நடித்தாலும் அவர் ஒரு ஹீரோ மெட்டீரியல் என்று உணர்ந்துகொண்ட மற்ற இயக்குநர்கள் அவரை தமிழில் கதாநாயகனாகவே புக் செய்தனர். அந்த வகையில் பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் படத்தில் ஹீரோவாக நடித்தார்.பிறகு ராதாமோகன் இயக்கத்தில் வெளியான மொழி படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது.தொடர்ந்து சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும், ராவணன், காவிய தலைவன், அபியும் நானும், ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இயக்குநர்: நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் ஜொலிப்பவர் பிருத்விராஜ். 2019ஆம் ஆண்டு மோகன்லாலை வைத்து அவர் இயக்கிய லூசிஃபர் படம், 2022ஆம் ஆண்டு மோகன்லாலை மீண்டும் இயக்கிய ப்ரோ டாடி ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் படங்களாக அமைந்தன. அதிலும் ப்ரோ டாடி படம் மிகச்சிறந்த காமெடி படமாகவும் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது நடிப்பில் கடைசியாக சலார் திரிஅப்படம் வெளியானது. அடுத்ததாக ஆடுஜீவிதம் படம் மார்ச் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
பெரும் எதிர்பார்ப்பு: இந்தப் படமானது பென்யாமின் எழுதிய The Goat's Life என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. கேரளாவை சேர்ந்த நஜீப் என்ற இளைஞன் சவுதிக்கு வேலை சென்ற சூழலில் அங்கு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் தொழில் கிடைக்க; அப்போது ஏற்பட்ட பிரச்னையால் சிறைக்கு சென்று அங்கிருந்து எப்படி வெளியே வந்தார் என்ற லைனை வைத்துக்கொண்டு சுவாரசியம் குறையாமல் நாவல் செல்லும். தற்போது அது படமாகியிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நஜீப் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடித்திருக்கிறார். பிளெஸ்ஸி படத்தை இயக்கியிருக்கிறார்.
ஆடியோ வெளியீட்டு விழா: படமானது உலகம் முழுவதும் மார்ச் 28ஆம் தேதி வெளியாகிறது. இதன் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிருத்விராஜ், இயக்குநர் பிளெஸ்ஸிி, நடிகர் மோகன்லால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது மோகன்லாலிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் மீரா கேட்ட கேள்வியும் அதற்கு மோகன்லால் அளித்த பதிலும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
என்ன நடந்தது: நிகழ்ச்சியின்போது தொகுப்பாளினி மீரா, மோகன் லாலும் பிளெஸ்ஸியும் இணைந்து சிறந்த மூன்று படங்களை நமக்கு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் ஆடு ஜீவிதம் படத்தில் நஜீப்பாக ஏன் மோகன்லாலை கருதவில்லை தன்மத்ரா படத்துக்காக லாலேட்டன் நிர்வாணமாக நின்றார். பிரமாரம் படத்துக்காக தலைகீழாக நின்றார். உண்மையில் பிளெஸ்ஸி சார் லாலேட்டனை ரொம்பவே கஷ்டப்படுத்திய இயக்குநர் என கூறினார்.
தரமான பதிலடி: அதற்கு பதிலளித்த மோகன்லால், "நிர்வாணமாக நிற்பதோ, தலை குனிந்து நிற்பதோ இவை இரண்டுமே எனக்கு கஷ்டம் இல்லை" என பதிலளித்தார். அவரது பதிலுக்கு ஒட்டுமொத்த அரங்கமும் ஆர்ப்பரித்தது. மேலும் தொகுப்பாளினி மீரா, மோகன்லாலை எதற்காக நஜீப்பாக கருதவில்லை என்று கேள்வி கேட்க; அதற்கும் பதிலளித்த மோகன் லால், "இது பெரிய விஷயம். தேவையில்லாத எதையும் கேட்காதே. என்னை டீசண்ட்டாக வாழ விடுங்கள். இந்தப் படத்துக்காக சிறந்த நபர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ப்ளெஸ்ஸி எங்களுக்கு அடுத்த படத்தில் வேலை தருவார்" என்றார். பிளெஸ்ஸி இயக்கத்தில் மோகன்லால், தன்மத்ரா, பிரமாரம், பிரணயம் ஆகிய படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் பிருத்விராஜ்: இதனையடுத்து நஜீப் வேடத்தில் நடிக்க பிருத்விராஜை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த பிளெஸ்ஸி, "இந்த கேரக்டரை நிறைய கலைஞர்கள் செய்யலாம். ஆனால் முதல் நாளே பிருத்விராஜ்தான் என் மனதில் இருந்தார். அந்த கேரக்டரை நோக்கி பயணிக்க அதிக அர்ப்பணிப்பு தேவை. அதனை பிருத்விராஜிடம் அதிகமாகவே பார்த்தேன் என்பதுதான் உண்மை" என்றார்.


Click it and Unblock the Notifications











