45 ஆண்டுகள்.. கோலிவுட்டின் ராஜா ரஜினி.. காமன் டிபி வெளியிட்ட பிரபலங்கள் #45YearsOfRajinismCDP

சென்னை: ஒன்லி ஒன் சூப்பர் ஒன் சூப்பர்ஸ்டார் திரை வாழ்க்கை அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தொடங்கி 45 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளதை ரசிகர்கள் கொண்டாட துவங்கி உள்ளனர்.

Recommended Video

Rajinikanth early morning walking in Kelampakkam

வரும் ஆகஸ்ட் 18ம் தேதி அபூர்வ ராகங்கள் படம் ரிலீசாகி 45 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.

அதனை கொண்டாடும் விதமாக, மோகன் லால் முதல் ஸ்ரேயா வரை பல திரை பிரபலங்களை வைத்து காமன் டிபியை ரஜினி ரசிகர்கள் வெளியிட்டு #45YearsOfRajinismCDP ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

45 ஆண்டுகள்

45 ஆண்டுகள்

பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர்ஸ்டாராக மாறியுள்ள ஒரு மனிதர், கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். தனது நடிப்பாலும், ஸ்டைலாலும், பஞ்ச் வசனங்களாலும், மக்கள் சேவையாலும், ரசிகர்கள் மனங்களில் நிறைந்து உள்ளார். அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அடியெடுத்து வைத்த அவர் அண்ணாத்தவாக அதகளப்படுத்த உள்ளார்.

மோகன் லால்

மோகன் லால்

ரஜினிகாந்தின் 45 ஆண்டுகால திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதன் முதல் கட்டமாக 45 வருட கொண்டாட்ட காமன் டிபியை தற்போது தென்னிந்திய திரை பிரபலங்களை வைத்து வெளியிடுகின்றனர். மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன் லால் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த காமன் டிபியை வெளியிட்டுள்ளார்.

இந்திய சினிமாவின் அடையாளம்

இந்திய சினிமாவின் அடையாளம்

5 டிகேட், 45 ஆண்டுகள், ஒரு அடையாளம், தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கே என பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் காமன் டிபியை வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த காமன் டிபியை வெளியிட்டு வருகின்றனர்.

ஏவிஎம் சாலையில் ஃபாரின் கார்

ஏவிஎம் சாலையில் ஃபாரின் கார்

தன்னை உள்ளே விட மாட்டேன் என்று சொன்ன அதே ஏவிஎம் ரோட்டில் ஃபியாட் ஃபாரின் காரில், ராபின்சன் ஃபாரின் டிரைவருடன் வந்து இறங்கிய ரஜினியின் நினைவுகளை பகிரும் விதமாக இருக்கும் சிம்பிளை ரசிகர்கள் பலரும் குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர். ஏகப்பட்ட ரஜினிஸம் இந்த காமன் டிபியை நிறைத்து இருக்கிறது.

கோட்டை

கோட்டை

சினிமா பேட்டையில் தனது ஆதிக்கத்தை செலுத்திய அருணாச்சலம் சென்னை ஜார்ஜ் கோட்டையில் தனது கொடியை பறக்கவிடுவாரா? என்ற கேள்வி நீண்ட காலமாகவே எழுந்து வருகிறது. ரஜினியின் அரசியல் வருகை நெருங்கி விட்டதை நினைவு படுத்தும் விதமாக ஒரு பக்க கண்ணாடியில் கோட்டையும், மறுபக்க கண்ணாடியில் ரஜினியின் என்ட்ரியையும் எடிட்டர் செதுக்கி வைத்துள்ளார்.

தலைவா

தலைவா

மோகன் லால், மம்மூட்டி, பிருத்விராஜ், கெளதம் மேனன், ரத்னகுமார் என ஏகப்பட்ட பிரபலங்கள் சூப்பர்ஸ்டாரின் இந்த காமன் டிபியை வெளியிட்டு வருகின்றனர். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயாவும் காமன் டிபியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, தலைவா என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இதுவெறும் ஃபர்ஸ்ட் லுக் தான்

இதுவெறும் ஃபர்ஸ்ட் லுக் தான்

வரும் ஆகஸ்ட் 18ம் தேதி வரை ரஜினியின் 45 ஆண்டு கால கொண்டாட்டத்திற்கு ஏகப்பட்ட ஏற்பாடுகளை ரஜினி ரசிகர்கள் அதி தீவிரமாக செய்து வருகின்றனர். இந்த காமன் டிபி ரிலீஸ் வெறும் ஃபர்ஸ்ட் லுக் தான் என்றும், இன்னும் டீசர், டிரைலர், மெயின் பிக்சர் எல்லாம் காத்துக் கொண்டிருக்கிறது என ரஜினி ரசிகர்கள் கெத்து காட்டுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X