தனி ஒருவன் பார்ட் 2 ஸ்கிரிப்ட் ரொம்ப கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன்...ராஜா மோகன்

சென்னை: இயக்குநர் ராஜா மோகன்,தன் தம்பி ரவி நடிப்பில் தான் இயக்கிய தனி ஒருவன் படத்தின் பார்ட் 2 ஸ்கிரிப்டை கஷ்டப்பட்டு எழுதி முடிச்சு இருக்காராம்.

ராஜா மோகன் தன் ட்வீட்டர் வலை தளத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில்,டி ஒ என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு தனி ஒருவன் படத்தின் பார்ட் 2 வுக்கான ஸ்க்ரிப்டை ரொம்ப கஷ்டப்பட்டு எழுதி முடித்ததா சொல்லி இருக்கார்.

mohan raja comes up with thani oruvan part 2

தன்னோட அசிஸ்டென்ட்ஸ் கிட்ட ஸ்கிரிப்ட் பத்தி கேட்டாராம் ராஜா.அவங்க 200 சதவிகிதம் நல்லா வரும் சார் படம்னு சொன்னாங்களாம்.

அந்த நேரம் பார்த்து இயக்குநர் ராம் சார் ராஜாவுக்கு கால் பண்ணினாராம். இப்போ மறுபடியும் தனி ஒருவன் படம் பார்த்து இருக்கேன். பார்ட் 2 இதை விட நல்லா கேர்ஃபுல்லா பண்ணுங்கன்னு சொன்னாராம்.

இதை தன் பதிவில் மகிழ்வுடன் பகிர்ந்துள்ளார் இயக்குநர் ராஜா மோகன்.தனி ஒருவன் இவருக்கு மட்டுமில்லாமல் இவரின் சகோதரர் ஜெயம் ரவி மற்றும் நடிகர் அரவிந்த சாமிக்கும் புகழ் வாங்கித் தந்த படம்.

ஆர்ப்பாட்டம் இல்லாமல் தனி ஒருவன் படம் சூப்பர் டூப்பர் ஹிட். இதில் நயன்தாராவுக்கு நல்ல கேரக்டர் குடுத்து இருந்தார் ராஜா.

அரவிந்த சாமியின் ரீ என்ட்ரிக்கு அர்த்தம் தந்த படம்னு கூட சொல்லலாம். பார்ட் 2 எப்படி இருக்கும், யார் யார் நடிப்பார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X