விஜய் படம் பற்றி நல்ல வார்த்தை சொன்ன மோகன் ராஜா
சென்னை: விஜய்யை வைத்து மீண்டும் படம் எடுப்பது குறித்து விபரம் தெரிவித்துள்ளார் இயக்குநர் மோகன் ராஜா.
மோகன் ராஜா இயக்கத்தில் விஜய் நடித்த வேலாயுதம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலும் குறிப்பாக அண்ணன்-தங்கை பாச காட்சிகள் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்தது.
அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் சேர வேண்டும் என்பதே விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இந்நிலையில் தான் மோகன்ராஜா நல்ல வார்த்தை சொல்லியுள்ளார்.

விஜய்
சென்னையில் உள்ள கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மோகன் ராஜா, வேலாயுதம் படத்தை விஜய் சாருடன் பண்ணினேன். மீண்டும் அவரை வைத்து படம் எடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இது விஜய் ரசிகர்களுக்கு நல்ல செய்தி ஆகும்.

மோகன் ராஜா
புதுப்படம் தொடர்பாக விஜய், மோகன்ராஜா ஏற்கனவே சந்தித்து பேசிவிட்டதாக கூறப்படுகிறது. விஜய் படத்திற்கான ஸ்க்ரிப்ட் எழுதும் வேலையை துவங்கிவிட்டாராம் மோகன் ராஜா. ஸ்க்ரிப்ட் எழுதும் பணி இரண்டு மாதங்களில் முடிந்துவிடுமாம்.

புதுப்படம்
மோகன்ராஜா இயக்கத்தில் விஜய் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவி
விஜய் தற்போது அட்லியின் இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். மோகன் ராஜா தனது தம்பியை வைத்து தனி ஒருவன் 2 படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











