'என் தம்பி இங்கிலீஷ் படத்துல நடிச்சுட்டான்' - பெருமையில் பொங்கும் மோகன் ராஜா!
Recommended Video

சென்னை : ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிப்பில் 'டிக் டிக் டிக்' திரைப்படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டது.
இந்தப் படம் ஹாலிவுட் படங்களோடு ஒப்பிடும் அளவிற்கு உள்ளது என ஜெயம் ரவி நடித்துள்ள 'டிக் டிக் டிக்' படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் முதல் விண்வெளிப் படமான இதில் இந்தியாவை தாக்கவரும் ஒரு விண்கல்லை இடைமறித்து தகர்க்க ஜெயம் ரவி குழுவினர் எடுத்துக்கொள்ளும் மிஷன் தான் இந்த டிக் டிக் டிக்.
பிரபல இயக்குனரும் ஜெயம் ரவியின் அண்ணனுமான மோகன் ராஜா "என் தம்பி இங்கிலிஷ் படத்துல நடிச்சுட்டான்..:" என ட்விட்டரில் பெருமையாகக் கூறியுள்ளார். "தமிழ் சினிமாவின் தரத்தின் அளவீட்டை உயர்த்தியதற்காக நன்றி" என அவர் மேலும் கூறியுள்ளார்.
மோகன் ராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட ஜெயம் ரவி சினிமாவில் இப்போது வேறொரு ட்ராக்கில் பயணித்து வருகிறார். அவ்வப்போது அண்ணனின் படங்களிலும் நடித்துவரும் அவரை தம்பிடா எனக் கொண்டாடி இருக்கிறார் ராஜா.


Click it and Unblock the Notifications











