தம்பி வழியில் அண்ணன். மகனை களம் இறக்கும் ராஜா.
சென்னை: ஜெயம் ரவியை தொடர்ந்து அவரது அண்ணன் மோகன் ராஜாவும் அவரது மகன் பிரணவ் மோகனை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்துகிறார்.
விஜய் ஆண்டனியின் அடுத்த படமான தமிழரசனில் பிரணவ் மோகன் அறிமுகமாகிறார். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இவர் முன்பு ஜெயம் ரவியின் தாஸ் படத்தை இயக்கியவர்.
இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, சோனு சூட், சங்கீதா கிரிஷ் மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். இதில், பிரணவ் படத்தில் தனது பகுதிகளுக்கு டப்பிங் பேசி முடித்துவிட்டார்.

தமிழரசன் படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இன்னொரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், இந்தப் படத்தில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய ஒரு பாடல் உள்ளது,.அவர் ஒரு இடைவெளிக்குப் பிறகு இளையராஜாவுடன் இணைகிறார்.
ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவி கடந்த ஆண்டு வெளியான 'டிக் டிக் டிக்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. எப்படியோ எடிட்டர் மோகன் குடும்பத்தில் அடுத்ததாக 2 நடிகர்கள் தயாராகி விட்டனர்.
இன்னும் சில வருடங்களில் இந்த குட்டி நடிகர்கள் ஹீரோக்களாக கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தமிழ் சினிமா கலகலப்பாகத்தான் போய்ட்டிருக்கு போல!


Click it and Unblock the Notifications











