முன்னணி தெலுங்கு நடிகரின் 100வது படத்தை இயக்கும் மோகன் ராஜா!

சென்னை : தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள நாகார்ஜுனாவின் 100வது படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாகார்ஜுனாவின் 97வது திரைப்படத்தை தற்போது ப்ரவீன் சத்தாரு இயக்கி வருகிறார்.

மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக இருக்கும் நாகார்ஜுனாவின் 100வது திரைப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்க இதில் மேலும் பல நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

தனி ஒருவன்

தனி ஒருவன்

தொடர்ந்து ரீமேக் படங்களை இயக்கி வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வந்த மோகன்ராஜா இப்பொழுது தனித்துவமான அதுவும் சொந்த கதைகளை இயக்கி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் பலரது கவனத்தையும் பெற்றதோடு தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் ரீமேக்

தெலுங்கில் ரீமேக்

தனி ஒருவன் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்ட இயக்குனர் மோகன் ராஜா அடுத்து தனி ஒருவன் பாகம் 2 கதை உருவாகி வருவதாக கூறிவந்தார். இந்த நிலையில் மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் கிடைத்த லூசிஃபர் திரைப்படத்தை இப்பொழுது தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான லூசிஃபர் சென்ற ஆண்டு வெளியாகி மலையாள திரைப்படத்துறையில் வரலாறு காணாத வசூலை வாரி குவித்த நிலையில் இப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட அதில் நடிகர் சிரஞ்சீவி மோகன்லால் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. அதையடுத்து மீண்டும் தெலுங்கு திரைப்படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார்.

 அப்பா மகன் உறவை சொல்லும்

அப்பா மகன் உறவை சொல்லும்

பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் 100வது திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக இருக்க இந்த படம் மல்டி ஸ்டார் கதையாக உருவாக உள்ளது. மேலும் இந்த படத்தில் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா மற்றும் அகில் ஆகியோரும் நடிக்க உள்ளனர். இதற்கு முன்பே இவர்கள் இணைந்து நடித்த மனம் அனைவரது மனங்களையும் வென்று வெற்றி பெற்ற நிலையில் இப்பொழுது அதே போன்ற கதையில் நாகார்ஜுனாவின் 100வது திரைப்படமும் உருவாகிறது. அப்பா மற்றும் மகன்களுக்கு இடையே உள்ள உறவை சொல்லும் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X