சுஜீத், விவி விநாயக் இல்லை.சிரஞ்சீவி நடிப்பில் 'லூசிபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார் மோகன் ராஜா!
சென்னை: லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கை மோகன் ராஜா இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மோகன்லால் நடித்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம், லூசிஃபர். இதை நடிகர் பிருத்விராஜ் இயக்கி இருந்தார்.
இந்தப் படம் தமிழில் டப் ஆகி வெளியானது. மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டோவினோ தாமஸ், சாய்குமார் உட்பட பலர் இதில் நடித்திருந்தனர்.

வசூல் சாதனை
இந்த படம் மலையாளத்தில், வசூல் ரீதியாக சாதனைப் படைத்தது. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் இது என்கிறார்கள். தான் இயக்கிய முதல் படம் சூப்பர் ஹிட்டானதால் நடிகர் பிருத்வி ராஜ் உற்சாகமாக இருக்கிறார். அடுத்தும் அவர் படம் இயக்க இருக்கிறார்.

ரீமேக் உரிமை
இந்நிலையில், லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை, மெகா ஸ்டார் சிரஞ்சீவி வாங்கியிருந்தார். இந்தப் படத்தை விவி விநாயக் இயக்குவார் என முதலில் தகவல்கள் வெளியாயின. பின்னர், சாஹோ படத்தை இயக்கிய சுஜீத் இயக்குவார் என்று கூறப்பட்டது.

மோகன் ராஜா
பின்னர் அவர் விலகி விட்டதாகவும் விவி விநாயக்கே இயக்குவார் என்றும் கூறப்பட்டது. இப்போது அவரும் இல்லையாம். மோகன் ராஜா இயக்குவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தெலுங்கில் இருந்து பல படங்களை தமிழில் ரீமேக் செய்துள்ள மோகன் ராஜா, இந்தி படமான அந்தாதுனை ரீமேக் செய்வதாக இருந்தது.

திடீரென விலகினார்
சிறந்த இந்தி படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என 3 தேசிய விருதுகளைப் பெற்ற அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை, நடிகர் தியாகராஜன் பெற்றிருந்தார். இதில் பிரஷாந்த் ஹீரோவாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதை இயக்க இருந்த மோகன் ராஜா திடீரென விலகினார்.

ரீமேக் செய்வார்
இந்நிலையில், அவர் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் தனி ஒருவன் படத்தின் அடுத்தப் பாகத்தை இயக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்க இருக்கிறார். இப்போது ஆச்சாரியா படத்தில் நடிக்கும் சிரஞ்சீவி அதை முடித்துவிட்டு இதில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











