நீங்களுமா இப்படி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் மோகன் ராஜா!

சென்னை: என்னங்க நீங்களுமா.. இப்படிக் கேட்க வைத்து விட்டார் இயக்குநர் மோகன்ராஜா. ஆமாங்க.. அவரும் நடிக்க வந்துட்டார்.. அதுவும் வில்லன் வேடத்தில்.

இயக்குநரும், நடிகர் ஜெயம் ரவியின் அண்ணணுமான மோகன் ராஜா தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'.

mohan raja to don villain role in vijay sethupathi movie

மியூசிகல் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தில், விஜய் சேதுபதி நாயகனாகவும், மேகா ஆகாஷ் நாயகியாகவும் நடிக்கின்றனர். இப்படம் விஜய் சேதுபதியின் 33வது திரைப்படமாகும்.

தடையறத் தாக்க, தடம் திரைப்பட இயக்குநர் மகிழ் திருமேனி ஏற்கனவே இப்படத்தில் நடித்து வருகிறார். 'இமைக்கா நொடிகள்' படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் நடித்த ருத்ரா கதாபாத்திரத்திற்கு இவர்தான் குரல் கொடுத்திருந்தார். தற்போது இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் மோகன் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் நடிக்கும் 2-வது படமாக இது அமைந்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'என்ன சத்தம் இந்த நேரம்' என்ற திரைப்படத்தில் ராஜா ஏற்கனவே நடித்திருந்தாலும் இத் திரைப்படம், போதிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், இந்தப் படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜாவுக்கு நடிப்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் வந்தன. ஆனால், அனைத்தையுமே தவிர்த்து வந்தார்.

mohan raja to don villain role in vijay sethupathi movie

பேராண்மை திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதிலிருந்தே மோகன் ராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரோகந்த்தை தெரியுமென்பதால் அவர் இந்த பாத்திரத்தில் நடிக்கக் கேட்டதும் ராஜா உடனே ஒப்புக்கொண்டுள்ளார். இந்த அறிவிப்பை அவரது தம்பி ஜெயம் ரவி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

'வேலைக்காரன்' படத்தைத் தொடர்ந்து 'தனி ஒருவன் 2' படத்தை இயக்கவிருந்த ராஜா, ஜெயம் ரவி படங்களில் நடித்து வருவதால் எப்போது படப்பிடிப்பு என்பது தெரியாமல் இருக்கிறது. இந்த இடைவெளியில், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் நடிக்கவுள்ளார் ராஜா.

அசத்துங்க ராஜா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X