விஜய்சேதுபதிக்காக நடிகர் அவதாரம் எடுக்கும் மோகன் ராஜா!

சென்னை: விஜய்சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் இயக்குநர் மோகன் ராஜா நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த ஸ்பெஷல் அப்டேட்டை நடிகரும் மோகன் ராஜாவின் தம்பியுமான ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் ரிவீல் செய்துள்ளார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் படம் குறித்த ஸ்பெஷல் அப்டேட்டை ஜெயம் ரவி அறிவிப்பார் என்று காலை முதலே படக்குழு அறிவித்து வந்த நிலையில், அந்த சர்ப்ரைஸ் அப்டேட் விஜய்சேதுபதி மற்றும் மோகன் ராஜா ரசிகர்களை குஷிப் படுத்தியுள்ளது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

யாதும் ஊரே யாவரும் கேளிர்

சந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகநாத் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மேகா ஆகாஷ், விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் தான் யாதும் ஊரே யாவரும் கேளிர். ஈ, பேராண்மை, புறம்போக்கு என்னும் பொதுவுடைமை போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி. ஜனநாதனின் உதவி இயக்குநராக இருந்த வெங்கட கிருஷ்ணா ரோகநாத், இந்த படத்தின் மூலம் இயக்குநராகிறார்.

மோகன் ராஜா

ஜெயம் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மோகன் ராஜா, தொடர்ந்து தனது தம்பி ஜெயம் ரவியை வைத்து பல படங்கள் இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வந்தார். அதற்கு பிறகு, நடிகர் விஜய்யின் வேலாயுதம், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள மோகன் ராஜா, விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகவுள்ளார்.

அடுத்தடுத்து

அடுத்தடுத்து

நடிகர் விஜய்சேதுபதி தூங்குவாரா மாட்டாரா என்பதே தெரியவில்லை. தொடர்ந்து பல படங்களில் வழக்கம் போல நடித்து தள்ளுகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் சங்கத்தமிழன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்தது, மாமனிதன், கடைசி விவசாயி, லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், தளபதி 64 என வரிசைக் கட்டி நடித்து வருகிறார்.

தனி ஒருவன் 2

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்திற்கு பிறகு இயக்குநர் மோகன் ராஜா தனது அடுத்த படத்தை இன்னும் துவங்கவில்லை. ஜெயம் ரவி, மோகன் ராஜா கூட்டணியில் வெளியான தனி ஒருவன் படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த நிலையில், ரசிகர்கள் தனி ஒருவன் 2 படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவுள்ள ஜெயம் ரவியும் அடுத்தடுத்து பல படங்களை கைவசம் வைத்துள்ளதால், தனி ஒருவன் 2 எப்போது நிகழும் என்பது தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X