டாப் கியர் போட்டுத் தூக்கும் அஜித் குமார்.. ஏகே 64 படத்தை இயக்கும் விஜய் பட இயக்குநர்.. அட அவரா?
சென்னை: அஜித்தின் 62-வது படமான விடாமுயற்சி திரைப்படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் தனது 63-வது படமான குட் பேட் அக்லி படத்தில் விரைவில் நடிக்கப் போகிறார் என்றும் கூறுகின்றனர்.
குட் பேட் அக்லி திரைப்படம் சொல்லி அடிச்ச கில்லி போல அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அதிரடியாக உருவாகி வருகிறது.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் தனது 64 வது படத்திற்கான இயக்குநரையும் சமீபத்தில் லாக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அரசியலுக்கு செல்லும் விஜய்: தளபதி விஜய் ' தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் தளபதி 69-வது படத்தில் நடித்து முடித்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக சினிமாவுக்கு நிரந்தர குட் பை சொல்லிவிட்டு கிளம்பப் போவதாக அவரே அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் முடிவுக்குப் பிறகு நடிகர் விஜய்யின் இந்த முடிவில் மாற்றம் வரும் என்றும் பலர் காத்திருக்கின்றனர். ஆனால், இதுதான் டாப் கியர் போட்டு தூக்க வேண்டிய தருணம் என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட அஜித் அடுத்தடுத்த படங்களில் ஆர்வம் செலுத்தி வருவதாக கூறுகின்றனர்.
அஜித் இயக்குநர்: அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க முடிவு செய்துள்ளார். கோட் படம் கூட அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட் பிரபு படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விஜய் படத்தை இயக்கிய இயக்குநருடன் நாம் ஏன் கைகோர்க்க கூடாது என்கிற முடிவுக்கு தற்போது அஜித் வந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏகே 64 இயக்குநர் இவரா?: நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா சமீபத்தில் அஜித்தை சந்தித்து சூப்பரான ஒரு கதை சொல்லியதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், நடிகர் அஜித்துக்கும் கதை பிடித்துப் போய் விட்டதாகவும் அடுத்த படத்தை இவருடன் செய்யலாம் என்கிற முடிவுக்கு அவர் வந்திருப்பதாகவும் கூறுகின்றனர். விஜய்யின் வேலாயுதம் படத்தை இயக்கியார் மோகன் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
தனி ஒருவன் 2 தாமதம்: ஏஜிஎஸ் நிறுவனம் மோகன் ராஜா கேட்ட பெரிய பட்ஜெட்டை ஒதுக்க தயங்கிய நிலையில் தனி ஒருவன் 2 திரைப்படம் இப்போதைக்கு உருவாகாது என தெரிகிறது. காட்ஃபாதர் படத்தை மோகன் ராஜா இயக்கிய நிலையில், மீண்டும் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தையும் அவர் இயக்கப் போவதாகவும் அடுத்து அஜித் படத்தையும் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறுத்தை சிவா இருக்காரே?: சூர்யாவை வைத்து கங்குவா படத்தை முடித்த சிறுத்தை சிவா மீண்டும் அஜித்துடன் இணைந்து ஒரு படம் பண்ண போவதாகவும் தகவல்கள் வெளியாகின. அவரும் லைன் அப்பில் இருப்பதாகவும் ஏகே 64 அல்லது 65 படத்தை அவர் இயக்குவார் என்றும் மோகன் ராஜா மற்றும் சிறுத்தை சிவா யார் முதலில் ரெடியாகி வருகிறார்களோ அவர்களுடன் அஜித் இணையப் போதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











