இவர்தான் அமைச்சர் அனிருத்த பிரம்மராயரா? பொன்னியின் செல்வனில் இணைந்த மற்றொரு பிரபலம்!
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல குணசித்திர நடிகர் மோகன் ராமன் இணைந்துள்ளார்.
லைகா நிறுவனம் சுமார் 800 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளது.
அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்துள்ளது.
இந்நிலையில், நடிகர் மோகன் ராமனும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.
தாடி வளர்க்கும் மோகன் ராமன்
தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நல்ல மளமளவென ஷேவ் செய்துவிட்டு, குணசித்திர வேடங்களில் தொடர்ந்து அசத்தி வரும் மோகன் ராமன், திடீரென இதுவரை இல்லாத அளவுக்கு நீண்ட தாடியை வளர்த்து வருகிறார். ஏதாவது விஞ்ஞானியாக நடிக்க உள்ளாரா என ரசிகர்கள் அவரை தொல்லை செய்ய, பொன்னியின் செல்வன் படத்திற்காக வளர்க்கிறேன் என அறிவித்துள்ளார்.
எதுவரை
பொன்னியின் செல்வன் படத்திற்காகத் தான் தாடி வளர்ப்பதாக தெரிவித்துள்ள மோகன் ராமன், அடுத்த ஆண்டு ஜூன் வரை தனது தாடி இருக்கும் என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிப்பது உறுதியாகியுள்ளது.
அனிருத்த பிரம்மராயர்
பொன்னியின் செல்வன் நாவலில் மகா மந்திரி அனிருத்த பிரம்மாராயராக மோகன் ராமன் நடிப்பார் என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். மேலும், சிலர் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரம் என்றும், சிலர் குடந்தை ஜோதிடர் என்றும் தங்களது யூகங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால், எந்த கதாபாத்திரம் என்பதை மோகன் ராமன் ரிவீல் செய்யவில்லை.
பாடி பில்டிங்
பொன்னியின் செல்வன் போன்ற ராஜாகாலத்து படத்தில் இத்தனை கோடி பட்ஜெட்டில் நடிக்க வேண்டும் என்றால், அதன் நாயகர்கள் பாகுபலி பிரபாஸ் போன்ற உடல் தோற்றத்தை பெற்றிருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அதனை பூர்த்தி செய்ய, நடிகர் ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் அஸ்வின் ஜிம்மில் தொடர்ந்து கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருகின்றனர்.

விக்ரம் எப்போது?
ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவுள்ள நடிகர் விக்ரம், விக்ரம் 58 படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார். விரைவில் அந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு பொன்னியின் செல்வனில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. துருவ நட்சத்திரம் படத்திற்காகவும் கால்ஷீட்டை ஒதுக்க விக்ரம் முடிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











