பிக்பாஸ் மேடையில் பார்வையாளர்களையும் கண்ணீர் விட வைத்த மோகன் வைத்யா! #biggbosstamil3

Recommended Video

Bigg Boss 3 Tamil:பிக் பாஸ் 3யின் 15 கருப்பு ஆடுகள் | Bigg Boss 3 Contestants

சென்னை: பிக்பாஸ் நிகழ்சியில் பங்கேற்றுள்ள பரத நாட்டிய கலைஞர் மோகன் வைத்யா தான் கண்ணீர் விட்டதோடு பார்வையாளர்களையும் கலங்க செய்து விட்டார்.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நேற்று முதல் மீண்டும் ஒளிப்பரப்பாக தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசனின் அறிமுகத்திற்கு பிறகு ஒவ்வொரு போட்டியாளரும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். 100 நாட்கள் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் இருப்பவரே வெற்றியாளர் ஆவார்.

அட்டகாசமாக நடனம்

அட்டகாசமாக நடனம்

இந்நிலையில் நிகழ்ச்சியின் பதினோறாவது போட்டியாளராக பரத நாட்டிய கலைஞரும் இசைக் கலைஞருமான மோகன் வைத்யா பங்கேற்றார். விஸ்வரூபம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடனமாடிய உன்னை காணாது நான் இங்கு நான் இல்லையே.. என்ற பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.

மகனை காட்டிய கமல்

மகனை காட்டிய கமல்

பின்னர் நடிகர் கமல்ஹாசனுடன் மேடையில் உரையாடிய மோகன் வைத்யாவுக்கு கமல் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதாவது, பேச முடியாத மோகன் வைத்யாவின் மகனை மேடைக்கு அழைத்து மோகன் வைத்யாவிடம் காண்பித்தார்.

கண்ணீர்விட்ட தந்தை மகன்

கண்ணீர்விட்ட தந்தை மகன்

இதனை சற்றும் எதிர்பாராத மோகன் வைத்யா தனது மகனை கட்டிப்பிடித்து ஆரத்தழுவி கண்ணீர் விட்டு அழுதார். மோகன் வைத்யாவின் மகனும் தந்தையை 100 நாட்கள் பிரிய போகும் வேதனையை நினைத்து கண்ணீர் விட்டார்.

பேசமுடியாத மகன்

பேசமுடியாத மகன்

பின்னர் பேசிய மோகன் வைத்யா, எத்தனையோ பேரை பாட வைத்துள்ளேன், ஆனால் நான் பேசுவதை கூட என் மகனால் கேட்க முடியாது என கூறி உணர்ச்சிவசப்பட்டார். மோகன் வைத்யாவின் மகன் வாய் பேச முடியாத, காது கேளாத ஒரு மாற்றுத் திறனாளி ஆவார்.

கலங்கிய வைத்யா

கலங்கிய வைத்யா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது தனது மகனுக்காகத்தான் என்றும் கூறி கலங்கிய மோகன் வைத்யா, தனக்கு இப்படி ஒரு மகன் இருப்பது கடவுள் கொடுத்த கிஃப்ட் என்றார் ஆதாங்கத்துடன். அவர் உணர்ச்சிப்பொங்க உருக்கமாகப் பேசியது பார்வையாளர்களையும் கலங்கச்செய்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X