அன்னைக்கு அப்படி அழுத மோகன் வைத்யாவா இன்று இப்படி பேசினார்?! சேட் மோடில் பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் தர்ஷனை இனி என்னை அப்பா என கூப்பிடாதே என்று மோகன் வைத்யா பேசியது ஹவுஸ் மேட்ஸை கவலை அடைய செய்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரசியம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பிக்பாஸ் வீடு அமைதியாக இருப்பதைக் காட்டிலும் அடிதடியுடன் இருப்பதையே மக்கள் விரும்புகின்றனர்.
காலையில் வெளியான ப்ரமோவில் மீராவுக்கும் வனிதாவுக்கும் சண்டை என்பது உறுதியானது. இதனால் வனிதாவை விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள்.

தர்ஷனை திட்டிய மோகன் வைத்யா
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் மோகன் வைத்யா டென்ஷனாகி தர்ஷனை திட்டுவது தெரியவந்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் வயதில் மூத்தவராக இருப்பவர் மோகன் வைத்யா.

தந்தை ஸ்தானத்தில்..
அவரது சோகக்கதையை கேட்டபின் அவரிடம் மற்ற ஹவுஸ் மேட்ஸ் மிகவும் அன்பாக நடந்துகொள்கின்றனர். அவரை தந்தை ஸ்தானத்தில் வைத்துள்ளனர் என்பது ஹவுஸ் மேட்ஸின் நடவடிக்கையில் தெரிகிறது.

காமெடிக்கு டென்ஷன்
இந்நிலையில் இன்று வெளியான ப்ரமோவில் மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென், கவின், லாஸ்லியா, என அனைவரும் கூட்டமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அவர்கள் ஏதோ காமெடியாக சொல்ல உடனே டென்ஷன் ஆகிறார் மோகன் வைத்யா.

அப்பா என்று கூப்பிடாதே
எல்லாரும் காமெடி பண்ண நான் என்ன காமெடி பீசா என்றும் கோபமாக கேட்கிறார். அவரை அப்பா என அழைத்து தர்ஷன் சமாதானம் செய்ய முயற்சிக்கிறார். அப்போது குறுக்கிடும் மோகன் வைத்யா, உனக்கு ஒரே ஒரு ரிக்வெஸ்ட் இனி என்னை அப்பா என்று கூப்பிடாதே, அங்கிள் என்று கூப்பிடு என்கிறார்.

உடைந்துபோன தர்ஷன்
இதனால் உடைந்து போய் அழுகிறார் தர்ஷன். மோகன் வைத்யாவின் இந்த நடவடிக்கை சாண்டி, லாஸ்லியா, ஃபாத்திமா பாபு, கவின், முகென் உள்ளிட்ட அனைவரையும் காயப்படுத்தியுள்ளது.

ஆறுதல் கூறிய தர்ஷன்
பிக்பாஸ் வீட்டிற்கு வந்த மறு நாளே தனக்கு சொல்லி அழக்கூட ஆள் இல்லை என கூறி டைனிங் ஹாலில் அமர்ந்தபடி கதறினார் மோகன் வைத்யா. அப்போது தர்ஷன் உட்பட அனைவருமே நாங்கள் இருக்கிறோம் என ஆறுதல் கூறி அவரை சமாதானப்படுத்தினர்.

கட்டியணைத்த குடும்பத்தினர்
நேற்று முன்தினம் அவரது வாழ்க்கையின் மறக்க முடியாத சம்பவங்களை பகிர்ந்து கொண்டபோது கூட ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் அவரது கதையை கேட்டு கண்ணீர் விட்டனர். மேலும் அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறி சப்போர்ட்டாக பேசினர்.

உரிமையுடன் பேசிய ஹவவுஸ் மேட்ஸ்
தனது மகனால் தான் பேசுவதை கேட்க முடியாது பேச முடியாது என்று கூறிய மோகன் வைத்யா, இங்கு தனக்கு நிறைய பிள்ளைகள் உள்ளதாக கூறினார். அதனால் ஹவுஸ் மேட்ஸ் அவருடன் உரிமையுடன் பேசி வந்தனர்.

நேற்றும் கோபப்பட்ட மோகன் வைத்யா
இந்நிலையில் தர்ஷனிடம் மோகன் வைத்யா பேசிய பேச்சு ஒட்டு மொத்த குடும்பத்தினரையும் கவலையடைய செய்துள்ளது. நேற்றும் கூட சாண்டி மற்றும் சரவணனிடம் கோபித்துக்கொண்டார் மோகன் வைத்யா. அவரிடம் மன்னிப்பு கேட்டு பழையபடி நார்மல் மூடுக்கு கொண்டுவந்தார் சாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











