Mohan - சாலையில் இறந்து கிடந்த நடிகர் மோகன்.. கடைசில இப்படி ஆகிப்போச்சே

மதுரை: Mohan (மோகன்) அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்த மோகன் மதுரையில் சாலையில் இறந்து கிடந்த சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சினிமா எனும் கனவு தொழிற்சாலையில் பணிபுரிய 99 சதவீதத்தினருக்கு ஆசை இருக்கிறது. அதில் இணைந்து அடையாளப்பட்டுவிட்டால் புகழும், பணமும் அதிகமாகவே கிடைத்துவிடும் என்பதால் பலரும் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்து சினிமாவுக்கு முயற்சிக்கிறார்கள். அவர்களில் பலர் வெல்கிறார்கள் பலர் தோற்கிறார்கள் பலர் ரொம்பவும் இல்லாமல் காணாமலும் போகாமல் ஓரளவுக்கு அடையாளப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர் மோகன்.

Mohan who starred in the film Apoorva Sagotharargal was found dead on the road in Madurai

அபூர்வ சகோதரர்கள்: உயரம் குறைவான மோகன் தன்னுடைய உடலில் குறையையே நிறையாக மாற்றி சினிமாவுக்கு வந்தவர். மதுரையை பூர்வீகமாகக் கொண்ட அவர் கமல் ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமலுக்கு நண்பர்களாக வரும் உயரம் குறைவானவர்களில் ஒருவராக நடித்தார். படம் ஹிட்டானது அனைவரும் அறிந்ததுதான். அந்தப் படத்துக்கு பிறகு தமிழில் சில படங்களில் நடித்தார்.

நான் கடவுள்: இந்திய அளவில் முக்கியமான இயக்குநர் என்று பெயர் எடுத்த பாலா இயக்கிய நான் கடவுள் படத்திலும் நடித்தார் மோகன். அந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. அதில் நடித்ததன் மூலம் கவனத்தை பெற்றார் மோகன். அதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. வயது முதிர்ச்சியும் ஆகிவிட்டது. இதனால் சென்னையிலிருந்து மதுரைக்கு சென்றுவிட்டார்.

வறுமையில் சிக்கிய மோகன்: மதுரைக்கு சென்றாலும் வறுமை அவரை வாட்டியிருக்கிறது. இதன் காரணமாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில்கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு காலத்தை தள்ளி வந்தார். ஆனால் வறுமை அவரை தள்ளி வைக்கவில்லை. ஒருகட்டத்தில் அவர் யாசகம் பெறும் நிலையும் உருவாகியிருந்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க நேற்று சாலையோரத்தில் இறந்து கிடந்திருக்கிறார் மோகன்.

வேதனை: அவரது உடலை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மோகனின் உடலை உடற்கூராய்வு செய்வதற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வு முடிந்த கையோடு மோகனின் உடல் அவரது சொந்த ஊரான மேட்டூருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சினிமாவில் அடையாளப்பட்டு அடையாளமே இல்லாமல் மோகன் இறந்து கிடந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X