சிரஞ்சீவிக்கு அட்டகாசமான பிறந்தநாள் பரிசு.. வியப்பில் ஆழ்த்திய பிரபல நடிகர்.. வைரலாகும் போட்டோ !

ஹைதராபாத் : தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி சமீபத்தில் தனது 65வது பிறந்த நாளை கொண்டாடி அதையொட்டி பல்வேறு பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

இவ்வாறு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகராக உள்ள நடிகர் மோகன்பாபு அட்டகாசமான பரிசு ஒன்றை சிரஞ்சீவிக்கு கொடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

சிரஞ்சீவியின் பிறந்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி என இரண்டும் ஒரே நாளில் இந்த ஆண்டு வந்து படு ஜோராக மக்கள் அனைவரும் இந்த நாளைக் கொண்டாடிய நிலையில் நடிகர் மோகன்பாபு சிரஞ்சீவிக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு தற்போது பலராலும் பேசப்பட்டு வைரலாகி வருகிறது.

துள்ளலான நடிப்பின்

துள்ளலான நடிப்பின்

தெலுங்கு சினிமாவில் பல ஆண்டுகளாக வசூல் சக்கரவர்த்தியாக இருந்த வரும் நடிகர் சிரஞ்சீவி இன்றுவரை திரைப்படங்களில் தனது துள்ளலான நடிப்பின் மூலமும், அசத்தலான நடனத்தின் மூலமும், கண்ணிமைக்காமல் பார்க்கக்கூடிய ஆக்சன் சண்டைக்காட்சிகளின் மூலமும் இன்றுவரை ரசிகர்களை தொடர்ந்து ரசிக்க வைத்து வருகிறார்.

பிறந்தநாள் பரிசாக

பிறந்தநாள் பரிசாக

சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான கைதி நம்பர் 150, மற்றும் சை ரா நரசிம்ம ரெட்டி போன்ற திரைப்படங்கள் வெளியாகி சக்கைபோடு போட்ட நிலையில், தற்பொழுது இயக்குனர் கொரடல ரெட்டி இயக்கத்தில் டோலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஆச்சார்யா படத்தின் போஸ்டரை சிரஞ்சீவியின் பிறந்தநாள் பரிசாக அப்படக்குழு வெளியிட்டிருந்தது.

சமூக வலைதளங்களில்

சமூக வலைதளங்களில்

இவ்வாறு வெளியிடப்பட்ட ஆச்சார்யா படத்தின் போஸ்டர் அனைவரையும் கவர்ந்த நிலையில், பல்வேறு பிரபலங்களும் சிரஞ்சீவியின் மேல் கொண்டுள்ள அதீத அன்பாலும் மரியாதையாலும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

அட்டகாசமான பரிசு

அட்டகாசமான பரிசு

இந்நிலையில் தெலுங்கில் பிரபலமான மூத்த நடிகர்களில் ஒருவராக உள்ள நடிகர் மோகன்பாபு அனைவரும் வியக்கும் வகையில் சிரஞ்சீவிக்கு பிடித்தவாறு ஒரு அட்டகாசமான பரிசு ஒன்றை பிறந்தநாளுக்கு கொடுத்துள்ளார்.

மெகா ஸ்டார் நம்பர் பிளேட்

மெகா ஸ்டார் நம்பர் பிளேட்

சிரஞ்சீவியும் மோகன் பாபுவும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வரும் நிலையில் முழுக்க முழுக்க மரத்தை கொண்டு செய்யப்பட்ட அட்டகாசமான பைக் ஒன்றை கண்ணைக் கவரும் வகையில் சிரஞ்சீவிக்காகவே பிரத்யோகமாக தயாரித்து, பைக்கின் முன்பகுதியில் நம்பர் பிளேட் இருக்குமிடத்தில் மெகா ஸ்டார் என பொறிக்கப்பட்டிருக்கும் இந்த ரம்மியமான வுட்டன் பைக் அனைவரையும் மிரள வைத்துள்ளது.

வுட்டன் பைக்கில்

வுட்டன் பைக்கில்

இவ்வாறு யாரும் எதிர்பாராத வகையில் பிறந்தநாள் பரிசாக கிடைத்த வுட்டன் பைக்கில் செம ஸ்டைலிஷாக நின்றுகொண்டு சிரஞ்சீவி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படம் தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேற லெவல் வைரலாகி வந்ததை தொடர்ந்து, இப்படி ஒரு அட்டகாசமான பிறந்தநாள் பரிசளித்த மோகன்பாபுக்கு சிரஞ்சீவி தனது நன்றிகளையும் தெரிவித்து உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X