Don't Miss!
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- News
86 நிமிட பட்ஜெட் உரை.. தொடர்ந்து மேஜையை தட்டி வரவேற்ற பிரதமர் மோடி.. எத்தனை முறை தெரியுமா? ஆஹா!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Lifestyle
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளுக்கு முதலில் 'குட்-பை' சொல்லுங்க...
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கையில் சுத்தியல்..கொலைவெறியுடன் அலையும் விஷ்ணு விஷால்.. மோகன்தாஸ் க்ளிம்ப்ஸ் வீடியோ!
சென்னை : விஷ்ணு விஷால் நடிக்கும் மோகன்தாஸ் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
குள்ளநரிக்கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட பல வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
ரஜினி பட டைட்டிலை கைப்பற்றிய ஹீரோக்கள்...இதுல யாரு ஹிட் கொடுத்தது தெரியுமா?

எப்.ஐ.ஆர்
இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்து சமீபத்தில் வெளியான 'எப்.ஐ.ஆர்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. போலீசாரால் மிகவும் தேடப்படும் குற்றவாளியாக அபு பக்கர் அப்துல்லா என்ற முஸ்லிம் இளைஞராக விஷ்ணு விஷால் நடித்திருந்தார். ஒரு வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இத்திரைப்படத்தில் கவுதம் மேனன், கௌரவ் நாராயணன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன்,ரெபா மோனிகா ஜான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

மோகன் தாஸ்
'எப்.ஐ.ஆர்' திரைப்படத்தை அடுத்து, நடிகர் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாராகி வரும் திரைப்படம் மோகன் தாஸ். களவு என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன்தாஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன், ஷாரீக் ஹாஸன், லல்லு, பிரகாஷ் ராகவன், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆக்சன் திரில்லர்
ஆக்சன் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள மோகன் தாஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். எடிட்டர் கிருபாகரன் படத்தொகுப்பு பணியை கவனிக்கிறார். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முழுமையாக நிறைவடைந்தது.
|
க்ளிம்ப்ஸ் வீடியோ
விஷ்ணு விஷாலின் பிறந்த நாளான இன்று மோகன்தாஸ் திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், விஷ்ணு விஷால் கையில் ஒரு சுத்தியலை வைத்துக்கொண்டு கொலைவேறியோடு சரமாறியாக யாரோ ஒருவரை தாக்குகிறார். திகிலூட்டும் வகையில் வெளியாகி உள்ள இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவை பார்ப்பதற்கு மிரட்டலாகவே உள்ளது. தற்போது இந்த க்ளிம்ப்ஸ் இணையத்தில் டிராண்டாகி வருகிறது.