FIFA: ENGஐ ஓடவிட்ட ARG.. ரசிகர்களின் அலப்பறையை ஆர அமர ரசித்த முரட்டு மெஸ்ஸி ரசிகர் மோகன்லால்

அமெரிக்கா: ஃபிஃபா 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் இன்னும் இரண்டு போட்டிகள் தான் மீதம் உள்ளது. இதில் இரண்டாவது அரையிறுதியில் நடப்புச் சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் அர்ஜெண்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்படி இருக்கையில் இந்த போட்டியை நடிகர்களான மோகன்லால், ஃபகத் ஃபாசில், தயாரிப்பாளரான பெரும்பாவூர் ஆண்டனி உள்ளிட்டோர் நேரில் சென்று போட்டியைப் பார்த்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இங்கிலாந்து - அர்ஜென்டினா இடையிலான போட்டியை இந்த உலகக் கோப்பையில் தரமான போட்டிகளில் ஒன்றாக வரிசைப்படுத்தலாம். அதுவும் இங்கிலாந்து பிளேயர்கள் அனைவரும் அர்ஜென்டினாபிளேயர்களை விடவும் உயரமானவர்கள் என்பதால் மொத்த போட்டியிலும் அவர்களின் ஆதிக்கத்தை பார்க்க முடிந்தது. முதல் பாதியில் அர்ஜென்டினாவோ போராடி டிபன்ஸ் செய்து கொண்டு இருந்தது. ஆனாலும் இரண்டாவது பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து ஒரு கோல் போட்டு முன்னிலையில் இருந்தது.

Mohanlal and Fahadh Faasil Watch Argentina Beat England in FIFA World Cup Semi-Final

சரி, இன்னும் 5 நிமிடங்கள் தான் இருக்கிறது, இஞ்சுரி டைம் 10 நிமிடங்கள் என்று வைத்தால் கூட, அர்ஜென்டினா இந்த 15 நிமிடங்களில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை டிரா செய்து எக்ஸ்ட்ரா டைமிற்கு ஆட்டத்தை எடுத்துச் செல்லுமா? இல்லை கோல் போடாமல் தோல்வியைத் தான் சந்திக்குமா என்று ரசிகர்களுக்கு பக் பக் மனநிலை. அர்ஜென்டினாவின் மேனேஜர் லயோனல் ஸ்கோனல் கிட்டத்தட்ட அழுகின்ற மனநிலையில் இருந்தார் என்றுதான் கூறவேண்டும்.

அர்ஜென்டினா வெற்றி: ஆனால் போட்டியின் 85 வது நிமிடத்தில் ஃபெர்னாண்டஸ் அணியின் முதல் கோலை அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். அதன் பின்னர் இஞ்சுரி டைம் தொடங்கி 2வது நிமிடத்தில் ஆட்டத்தின் கடைசி 10 நிமிடத்தில் சப்சூட்டாக களமிறங்கிய மார்ட்டினஸ் இரண்டாவது கோலை ஹெட்டர் ஷாட் அடித்து மொத்த போட்டியையும் அர்ஜென்டினாவுக்கு சாதகமாக மாற்றினார். மொத்த இங்கிலாந்து வீரர்களும் தங்களுக்கு எதிராக மெஸ்ஸி தான் கோல் அடிப்பார் என்று அவரை ரவுண்டு கட்டிக் கொண்டு இருந்தனர். இதைப் புரிந்து கொண்ட அர்ஜென்டினா வீரர்கள் போட்ட பிளானுக்கு பக்காவான ரிசல்ட் கிடைத்தது.

அதாவது, மெஸ்ஸி திறமையாக அசிஸ்ட் செய்து இரண்டு கோல்களை அர்ஜென்டினாவுக்கு பெற்றுக் கொடுத்தார். இறுதியாக அர்ஜென்டினா அணி 2 - 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. வரும் 21ஆம் தேதி ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள உள்ளது.

Mohanlal and Fahadh Faasil Watch Argentina Beat England in FIFA World Cup Semi-Final

முரட்டு மெஸ்ஸி ரசிகர்கள்: இந்நிலையில் அரையிறுதிப் போட்டியை மோகன்லால், ஃபகத் ஃபாசில், ஆண்டனி பெரும்பாவூர் என மலையாள திரையுலக பிரபலங்கள் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதுவும் அர்ஜென்டினா ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஒரு மெஸ்ஸி ரசிகராக ரசித்துக் கொண்டிருக்கும் மோகன்லாலின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் இவர்கள் இறுதிப் போட்டியையும் பார்த்துவிட்டுத்தான் நாடு திரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Read more about: france england football argentina
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X