மோகன்லால், ஜீத்து ஜோசப் மீண்டும் இணையும் 12Th Man… வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !

சென்னை : பிரபல இயக்குர் ஜீத்து ஜோசப் மற்றும் மோகன்லால் கூட்டணியில் உருவாகி உள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

12Th Man எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்க உள்ளார்.

இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மோகன்லால் தனது வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஜார்ஜ் குட்டி

ஜார்ஜ் குட்டி

2013ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான திரைப்படம் த்ரிஷ்யம். பல ட்விஸ்டுகளுடன் த்ரில்லிங் திரைப்படமான இப்படத்தில் ஜார்ஜ் குட்டி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அழகாக நடித்து கலக்கி இருப்பார்.இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

வசூல் சாதனை

வசூல் சாதனை

இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து த்ரிஷ்யம் 2 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்தது. இந்த திரைப்படத்திலும் முதல் பாகத்தில் நடித்திருந்த அனைவரும் நடித்திருந்தனர்.

12Th Man

12Th Man

இந்நிலையில் ஜீத்து ஜோசப் மற்றும் மோகன்லால் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு 12 Th Man எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார். மேலும், இந்த அதிகாரப்பூர்வ தகவலை மோகன்லால் தனது வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஜான்சன் இப்படத்திற்கு இசையமைக்கிறார், எடிட்டிங் வி.எஸ் விநாயக் கவனித்துக் கொள்கிறோனர். மற்ற நடிகர் நடிகையர் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதியில் உள்ளது.

பாதியில் உள்ளது.

மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப் ஆகியோர் ஏற்கனவே ராம் என்ற படத்தில் இணைந்துள்ளனர். ராம் வெளிநாட்டு இடங்களில் படமாக்கப்பட வேண்டிய படம் என்பதால் இப்படம் பாதியிலேயே உள்ளது. இப்படத்தில் த்ரிஷா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப் கூட்டணி இணைந்தால் அந்த திரைப்படம் நிச்சயம் வெற்றி வெறும் அந்த வகையில் 12Th Man திரைப்படம் நிச்சயம் ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X