இது எம்புரான் படை.. மாஸ் காட்டும் மோகன்லால், பிருத்விராஜ்.. லூசிஃபர் 2 ஸ்டார்ட்!

திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் மீண்டும் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

மொழி, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் தரமான நடிப்பை கொடுத்த பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் மோகன்லாலை வைத்து லூசிஃபர் படத்தை இயக்கி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார்.

மீண்டும் அவரது இயக்கத்தில் உருவான ப்ரோ டாடி படம் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், லூசிஃபர் 2 படத்தின் பணிகளை தொடங்கி உள்ளனர்.

நம்பர் ஒன்

நம்பர் ஒன்

மலையாள திரையுலகின் நம்பர் ஒன் நடிகராக பல ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார் மோகன்லால். சமீபத்தில் ஆர்மேக்ஸ் வெளியிட்ட டாப் நடிகர்கள் பட்டியலிலும் மோகன்லால் முதலிடத்தை பிடித்துள்ளார். மம்மூட்டி இரண்டாம் இடத்தில் உள்ளார். அதன் பின், பிருத்விராஜ், துல்கர் சல்மான் மற்றும் டோவினோ தாமஸ் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் உள்ளனர்.

பிளாக்பஸ்டர் லூசிஃபர்

பிளாக்பஸ்டர் லூசிஃபர்

கடந்த 2019ம் ஆண்டு பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் மற்றும் ஸ்பெஷல் கேமியோவாக பிருத்விராஜும் நடித்திருந்த லூசிஃபர் திரைப்படம் அரசியல் த்ரில்லர் படமாக வெளியாகி பட்டையை கிளப்பியது. பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி வரை வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

ஆபிரகாம் குரேஷி ரிட்டர்ன்ஸ்

ஆபிரகாம் குரேஷி ரிட்டர்ன்ஸ்

அந்த படத்தில் ஆபிரகாம் குரேஷி எனும் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருப்பார். கிளைமேக்ஸ் காட்சியில் வெளிநாட்டில் அவரது ராஜாங்கத்தை நடத்தும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், லூசிஃபர் 2 படத்திற்கு எம்புரான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆபிரகாம் குரேஷி ரிட்டர்ன்ஸ் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

லூசிஃபர் 2 டீம்

லூசிஃபர் 2 டீம்

நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் மற்றும் லூசிஃபர் படத்தின் கோர் டீமுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இதுதான் லூசிஃபர் 2 டீம் என அறிவித்துள்ள புகைப்படம் டிரெண்டாகி வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ள அப்டேட்களும் வெளியாக உள்ளன.

Recommended Video

12th Man Movie Review | Yessa ? Bussa ? | Mohanlal |Unni Mukundan | Jeethu Joseph | Filmibeat Tamil
மோகன்லால் மிரட்டல் லைன் அப்

மோகன்லால் மிரட்டல் லைன் அப்

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ராம், த்ரிஷ்யம் 3 உள்ளிட்ட படங்கள் ரெடியாகி வருகின்றன. மோகன்லால் இயக்கத்தில் உருவாகி வரும் பாரோஸ் திரைப்படமும் விரைவில் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில் அடுத்ததாக எம்புரான் படமும் தியேட்டரை தெறிக்கவிடப் போகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X