ஜெயிலர் பார்த்துட்டு மோகன்லால், சிவராஜ்குமார் என்ன சொன்னாங்க தெரியுமா?.. நெல்சன் பளிச் பேட்டி!

சென்னை: ஜெயிலர் படத்தில் கேமியோவாக நடித்திருந்தாலும் சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் வரும் அந்த சில நிமிடக் காட்சிகள் தியேட்டரில் ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்குகிறது. இந்நிலையில், ஜெயிலர் படத்தையும் அந்த படத்திற்கு கிடைத்துள்ள ரியாக்‌ஷனையும் பார்த்து விட்டு மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் போன் பண்ணி பேசியதாக நெல்சன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் இருந்தே ஹிட் படங்களை கொடுத்து வந்த நெல்சன் பீஸ்ட் படத்தில் சற்றே சறுக்கிய நிலையில், ஜெயிலர் படத்தில் மீண்டும் மாஸ் கம்பேக் கொடுத்த சந்தோஷத்தில் படம் வெளியான உடனே மீடியாக்களில் பேட்டி கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

Mohanlal and Shiva Rajkumar praised Nelson after Jailer success

ஜெயிலர் படத்தில் ஏன் இத்தனை பெரிய ஸ்டார் காஸ்ட் என்றும் மோகன்லால், சிவராஜ்குமார் படத்துக்குள் எப்படி வந்தார்கள் என்பது குறித்தும் ஏகப்பட்ட சுவாரஸ்ய தகவல்களை தனது பேட்டியில் பேசியுள்ளார்.

ரஜினி சார் ஹேப்பி: ஜெயிலர் ரிலீஸை முன்னிட்டு 4 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலைக்கு சென்று விட்டார் நடிகர் ரஜினிகாந்த். ஜெயிலர் படம் ரிலீஸாகி முதல் நாள் குவிந்த பாசிட்டிவ் விமர்சனங்களை பார்த்து விட்டு இயக்குநர் நெல்சனுக்கு போன் போட்டு வாழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Mohanlal and Shiva Rajkumar praised Nelson after Jailer success

நடிகர் விஜய் வாழ்த்து: ஜெயிலர் படத்தின் வசூல் விண்ணை முட்டும் அளவுக்கு உள்ள நிலையில், இயக்குநர் நெல்சனுக்கு போனில் நடிகர் விஜய் மெசேஜ் போட்டு வாழ்த்தியதாகவும் நெல்சன் அளித்த பேட்டியில் கூறி ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களின் சோஷியல் மீடியா சண்டையை முற்றுக்கு கொண்டு வர முயற்சி செய்துள்ளார்.

மோகன்லால் என்ன சொன்னார்: இயக்குநர் நெல்சன் அளித்த பேட்டியில் மோகன்லால் தனக்கு போன் செய்து விட்டு என்ன பண்ணி வச்சிருக்க நெல்சா இங்க ரெஸ்பான்ஸ் பயங்கரமா இருக்கு என பாராட்டினார். மேத்யூ எனும் கதாபாத்திரத்தில் மும்பையில் ஒரு டானாக மோகன்லாலை இந்த படத்தில் காட்டியிருப்பேன். அவர் வரும் காட்சிக்கெல்லாம் தமிழ்நாடு, கேரளா என அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் நான் எதிர்பார்த்த மாதிரியே வந்துள்ளது ஹேப்பி என்றார்.

Mohanlal and Shiva Rajkumar praised Nelson after Jailer success

சிவராஜ்குமார் சந்தோஷம்: சிவாண்ணாவும் போன் பண்ணாரு, அவர் இன்னமும் படத்தை பார்க்கவில்லை சீக்கிரம் மைசூரில் பார்ப்பேன் என்றார். ஒரே போன் காலா வருது, அவர் வரும் சீன் எல்லாம் தியேட்டரே தெறிக்குது என கர்நாடகாவில் இருந்து பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதாக பாராட்டினார். இவர்களை எல்லாம் வைத்து இன்னொரு ப்ரீக்வெல் மாதிரி பண்ணனும்னு ஆசை இருக்கு, அதுக்கான லீடும் வச்சிருக்கேன், எல்லாம் சரியா அமைச்சா பண்ணலாம் என நெல்சன் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X