மோகன்லாலின் மரக்கார் படம் திரையரங்குகளில் வெளியீடு... ரசிகர்கள் உற்சாகம்!

திருவனந்தபுரம் : நடிகர் மோகன்லால் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள வரலாற்று படம் மரக்கார்.

பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மரக்கார் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் மோகன்லால்

நடிகர் மோகன்லால்

நடிகர் மோகன்லால் தொடர்ந்து சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்த வெற்றிப் படங்களையும் கொடுத்து வருகிறார். அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சில படங்கள் ஒடிடியிலும் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.

மரக்கார் படம்

மரக்கார் படம்

இந்நிலையில் பிரியதர்ஷன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள வரலாற்றுப்படமான மரக்கார் சுமார் இரண்டு ஆண்டுகளாக ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் கொரோனா காரணமாக தள்ளிப் போனது.

ரசிகர்கள் விருப்பம்

ரசிகர்கள் விருப்பம்

இதையடுத்து படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஓடிடியில் தான் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

திரையரங்குகளில் ரிலீஸ்

திரையரங்குகளில் ரிலீஸ்

இந்நிலையில் தற்போது இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என படத்தின் நாயகன் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நட்சத்திர பட்டாளம்

நட்சத்திர பட்டாளம்

படத்தில் மோகன்லாலுடன் கீர்த்தி சுரேஷ், பிரபு, அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மலையாளத்தில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது.

மலையாள சூப்பர்ஸ்டார்

மலையாள சூப்பர்ஸ்டார்

மலையாளத்தில் சூப்பர்ஸ்டாராக விளங்கி வருபவர் மோகன்லால், தமிழிலும் இவர் விஜய்யுடன் நடித்த படம் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் மரக்கார் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்திய அளவில் படத்தின் ரிலீசை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X