Empuraan BO: விமர்சனங்களை தவிடு பொடியாக்கி இறங்கி ஆடிய மோகன்லால்.. 48 மணி நேரத்தில் எம்புரான் சாதனை!

திருவனந்தபுரம்: பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் நடிப்பில் மார்ச் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியான எம்புரான் திரைப்படம் முதல் 2 நாட்களில் 100 கோடி வசூல் ஈட்டி மிகப்பெரிய சாதனை படைத்திருப்பதாக மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

லைகா தயாரிப்பில் வெளியான இந்தியன் 2, விடாமுயற்சி உள்ளிட்ட படங்கள் அதிரடியாக ஓபனிங் வசூல் வேட்டையை கூட நடத்த முடியாமல் திணறிய நிலையில், மோகன்லால் மலையாள திரையுலகிலேயே இப்படியொரு ஓபனிங் பாக்ஸ் ஆபீஸ் சாதனையை படைக்க முடியும் என சாதித்துக் காட்டியுள்ளார்.

Mohanlal announces Empuraan joins 100 crore club in 48 hours

எம்புரான் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையிலும், மோகன்லால் ரசிகர்கள் படத்தை தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர். இந்த முறை மலையாள திரையுலகின் மிகப்பெரிய வெற்றிப் படமாகவே எம்புரான் மாறும் என்கின்றனர்.

புஷ்பா 2 சாதனை: புஷ்பா படத்தை விட புஷ்பா 2 படம் விமர்சன ரீதியாக அடிவாங்கியது. ஆனாலும், அந்த படத்தை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பார்த்து அதிகபட்சமாக 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை செய்தது. பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தையும் விமர்சகர்கள் கழுவி ஊற்றினாலும் அந்த படமும் 700 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. எம்புரான் படத்தின் அந்த ஃபாரஸ்ட் சண்டைக் காட்சி ஒன்று போதும் என்றும் கொடுத்த காசுக்கு திருப்திக் கொடுக்கும் விதமாக பிருத்விராஜ் சுகுமாரன் மோகன்லால் படத்தை இயக்கி கூஸ்பம்ப்ஸ் கொடுத்திருக்கிறார் என லாலேட்டன் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

100 கோடி வசூல்: எம்புரான் படம் முதல் நாளே 50 கோடிக்கும் அதிகமான வசூலை உலகளவில் ஈட்டியது. 48 மணி நேரத்தில் 100 கோடி வசூல் வேட்டையை நடத்தியிருப்பதாக மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே மோகன்லால் நடிப்பில் வெளியான படங்கள் பெரிதாக வசூல் ஈட்ட முடியாமல் தடுமாறி வந்த நிலையில், எம்புரான் அனைத்து தடைகளையும் உடைத்து வசூல் ரீதியாக வெற்றி வாகை சூடியிருக்கிறது.

200 கோடி விரைவில்: சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் எம்புரான் படத்துக்கு ஹவுஸ்ஃபுல்லாக டிக்கெட்டுகள் புக்காகி வரும் நிலையில், முதல் வார முடிவிலேயே 200 கோடி ரூபாய் வசூலை எம்புரான் படம் கடக்கும் என்றும் இதுவரை மலையாள படங்கள் எதுவும் செய்யாத வசூல் சாதனையை மோகன்லால் எம்புரான் படத்தின் மூலம் படைப்பார் என்றும் கூறுகின்றனர்.

மத பிரச்சனை: மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் வசூலை முறியடிக்கும் என்றும் மலையாள திரையுலகில் புதிய வசூல் சாதனையை எம்புரான் படைக்கும் என்றும் கூறி வரும் சூழலில், பாஜக அரசுக்கு எதிராகவே அரசியல் கதையை பிருத்விராஜ் உருவாக்கியிருக்கிறார் என்றும் ஆரம்பத்தில் இஸ்லாமியர்களை இந்துக்கள் கூண்டோடு அழிப்பது போன்ற காட்சிகள் எல்லாமே மத பிரச்சனையை உருவாக்கி படத்தை ஓட வைக்க மோகன்லாலும் பிருத்விராஜும் பார்த்த வேலை என்றும் இந்த படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என வட இந்தியாவில் எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X