விஷால், அனிஷா நிச்சயதார்த்தத்திற்கு மனைவியுடன் வந்த சூப்பர் ஸ்டார்

By Siva

Recommended Video

Actor Vishal- Anisha Reddy Engagement Photos

சென்னை: அனிஷா, விஷால் நிச்சயதார்த்தத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார்.

நடிகர் விஷாலுக்கும் அவரின் காதலி அனிஷா அல்லா ரெட்டிக்கும் ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஷாலின் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.

விஷால், அனிஷா திருமணம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

மோகன்லால்

மோகன்லால்

மலையாளத்தில் மோகன்லால் நடித்த வில்லன் படத்தில் விஷால் நடித்திருந்தார். இந்நிலையில் மோகன்லால் தனது மனைவியுடன் விஷாலின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டுள்ளார்.

குஷ்பு

குஷ்பு

விஷாலுக்கு நெருக்கமான குஷ்பு அக்கா அவரின் மகள்களும் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர்.

விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால்

விஷாலுக்கு அவரின் நெருங்கிய நண்பர்கள் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முத்தம் கொடுத்து வாழ்த்தினார்கள்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

புகைப்படங்களில் விஷாலும் சரி, அனிஷாவும் சரி மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள். அவர்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

கார்த்தி

கார்த்தி

நடிகர் பொன்வண்ணன், கார்த்தி அவரின் மனைவியும் விஷாலின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விஷாலும், கார்த்தியும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X