65 வயசுலயும் குறையாத எனர்ஜி.. 2 நடிகைகளுடன் மேடையில் லாலேட்டனின் மரண மாஸ் ஆட்டம்!
சென்னை: மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகிலும் பாகவதர் முதல் மாஸ் ஹீரோ'வரை அத்தனை கதாபாத்திரங்களிலும் நடித்துத் தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்து இருப்பவர் நடிகர் மோகன்லால். தற்போதைய இவர் இளம் டஃப் கொடுக்கும் வகையில் மேடையை நடிகையுடன் டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மனோஹரி பாடல்: இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி உலகளவில் வசூல் சாதனை படைத்த திரைப்படம் 'பாகுபலி'. இந்த படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற 'மனோஹரி' என்ற ஐட்டம் பாடல் ரசிகர்களிடையே அன்றும் இன்றும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பாடலாக உள்ளது.

லாலேட்டன்' மேஜிக்: அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மலையாள சினிமாவின் முன்னணி இளம் நடிகைகளான சானியா ஐயப்பன் மற்றும் ஸ்வாசிகா ஆகிய இருவருடன் இணைந்து சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் மனோகரி பாடலுக்கு டான்ஸ் ஆடினார்கள். வெள்ளை நிற பாரம்பரிய உடையில், முறுக்கு மீசையுடன் செம்ம கெத்தாக வந்த லாலேட்டன், அந்த இரண்டு நடிகைகளுக்கும் இணையாகத் நளினமான ஸ்டெப்ஸ்களை போட்டு ஒட்டுமொத்த அரங்கத்தையும் மிரள வைத்தார்.
வயசே ஆகாதா: 65 வயதைக் கடந்த நிலையிலும், மேடையில் தொய்வில்லாமல் அவர் காட்டிய எக்ஸ்பிரஷன்களும், அசைவுகளும் அங்கிருந்த ரசிகர்களைச் சீட்டின் நுனிக்கு வரவழைத்தது. இந்த நடன வீடியோவின் கிளிப்பிங்குகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும், லாலேட்டனுக்கு வயசே ஆகாதா? இன்னும் அதே பழைய எனர்ஜியோடு ஆடுகிறாரே என்றும், வயது வெறும் எண்கள் மட்டுமே என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார் என கமெண்ட்டுகளை தட்டிவிட்டு வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications