கெஸ்ட் ரோலில் வந்து போக மோகன்லாலுக்கு ரூ. 1 கோடி கேட்கும் பிரியதர்ஷன்!

பிரியதர்ஷன் இயக்கும் இந்தி படம் தேஸ். இதில் கெஸ்ட் ரோலில் மலையாளம் சூப்பர் ஸ்டார் மோகன்லாலை நடிக்க வைக்க அவர் விரும்புகிறார். அதற்காக அவருக்கு ரூ.1 கோடி கொடுக்குமாறு தயாரிப்பாளர் ரதன் ஜெயினிடம் பிரியதர்ஷன் கூறியிருக்கிறார். ஆனால் வெறும் கெஸ்ட் ரோலில் வந்து தலையைக் காட்டிவிட்டு செல்ல ரூ.1 கோடி ரொம்பவே டூ மச் என்று தயாரிப்பாளர் நினைக்கிறார். இதனால் ஜெயினுக்கும், பிரியதர்ஷனுக்கும் இடையே லடாய் ஏற்பட்டுள்ளதாம்.
மலையாளத்தில் பெரிய சூப்பர் ஸ்டார் நடிகர்களான மோகன்லால், மம்முட்டி ஆகியோருக்கான சம்பளமே குறைவுதான். மொத்த படத்தையே சில பல லட்சங்களில் முடித்து விடுவது அவர்களது வழக்கம். ஆனால தமிழைத் தாண்டி வரும்போது அதாக்கும், இதாக்கும் என்று அவர்களது சம்பளத்தை ஏற்றி விடுகிறார்கள்.
இந்த நிலையில்தான் இந்திப் படத்தில் கெஸ்ட் ரோலில் மோகன்லாலை நடிக்க வைப்பதற்கு மலையாளத்தைச் சேர்ந்தவரான பிரியதர்ஷன் ரூ. 1 கோடி கேட்டு இந்தித் திரையுலகினரையே அதிர வைத்துள்ளார்.
தயாரிப்பாளர் ரூ. 1 கோடி தர முடியாது என்று கூறியுள்ளதால், குறைவான சம்பளத்தில் எல்லாம் மோகன்லாலை நடிக்க வைக்க முடியாது. பாலிவுட் படத்திற்கு சொல்ப சம்பளத்தில் அவர் நடித்தால் கேரளாவில் மோகன்லாலின் மார்க்கெட் பாதிக்கும் என்று பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.
அது சரி, பாலிவுட்டில் மார்க்கெட் இல்லாத மோகன்லாலுக்கு ரூ.1 கோடி கொடுப்பதா என்று தயாரி்ப்பாளர் நினைப்பதில் தவறேதும் உள்ளதோ பிரியன்...?


Click it and Unblock the Notifications











