Mohanlal new car: தொடர்ந்து படம் ஃபிளாப் ஆனாலும்.. இத்தனை கோடிக்கு கார் வாங்கியிருக்காரே மோகன்லால்!
திருவனந்தபுரம்: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ள மோகன்லால் புதிதாக அதிக விலை உயர்ந்த பிரம்மாண்டமான சொகுசு காரை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார்.
மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தின் மூலம் 1980ல் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மோகன்லால். ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து
மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் நடிப்பில் த்ரிஷ்யம் 2வுக்கு பிறகு வெளியான அரை டஜன் படங்கள் சரியாக போகாமல் பெரும் சொதப்பல் சொதப்பி வருகிறது.
மோகன்லால் நடிப்பில் கடைசியாக வெளியான மான்ஸ்டர், அலோன் உள்ளிட்ட திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்த நிலையில், தான் சைலன்ட்டாக கேமியோ ரோலில் நடிக்க ஜெயிலர் படத்திலேயே அவர் கூப்பிட்ட உடனே கமிட் ஆனதாகவும் ட்ரோல்கள் கேரளாவில் பறந்தன.

ஜெயிலரில் மோகன்லால்: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் ட்ரோல் படமாக மாறிய நிலையில், அடுத்ததாக சூப்பர்ஸ்டாரை வைத்து சூப்பரான சம்பவத்தை செய்யப் போகும் உறுதியில் ஜெயிலர் படத்தை பான் இந்தியா படமாகவும் பான் நடிகர்கள் நடிக்கும் படமாகவும் உருவாக்கி வருகிறார். ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் மோகன்லாலும் நடித்து வருகிறார்.

பிரம்மாண்ட படங்கள்: சமீபத்தில் லோ பட்ஜெட்டில் உருவான மோகன்லால் படங்கள் தான் சொதப்பிய நிலையில், அவரது கைவசம் பாரோஸ், மலைக்கோட்டை வாலிபன் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்கள் உருவாகி வருகின்றன. சமீபத்தில், வெறும் ராட்சத கால் மட்டுமே இருந்த மலைக்கோட்டை வாலிபன் படத்தின் போஸ்டரே ரசிகர்களை மிரட்டியது.
மேலும், மோகன்லாலின் கனவுத் திரைப்படமான பாரோஸ் படத்தை பெரும் பொருட்செலவில் அவரே இயக்கி நடித்து வருகிறார். முதன்முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள நிலையில், அந்த படத்தை பார்த்து பார்த்து செய்து வருகிறார் மோகன்லால்.

பிரம்மாண்டமான சொகுசு கார்: இந்நிலையில், தற்போது திடீரென புதிதாக ஒரு சொகுசு காரை நடிகர் மோகன் லால் வாங்கி உள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. ஏற்கனவே அவரது காரேஜில் அரை டஜன் விலையுயர்ந்த ஃபாரீன் கார்கள் வரிசைக் கட்டி நிற்கும் நிலையில், தற்போது வெள்ளை நிறத்திலான ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரை தனது மனைவியுடன் சென்று வாங்கி உள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
காரின் விலை: இந்த வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரின் விலை மட்டும் 5 கோடி ரூபாயாம். இதன் விலையை கேட்டே கேரளாவில் பல பிரபலங்கள் இந்த விலைக்கு 5 படம் எடுத்துவிடுவோமே என ஷாக் ஆகி உள்ளார்களாம். கார்கள் மீது அதிக பிரியம் கொண்ட மோகன்லால் தற்போது வாங்கி உள்ள கார் மணிக்கு 250 கி.மீ., வேகத்தில் செல்லும் என்கின்றனர். அந்த காரை மனைவி சுசித்ராவுடன் இணைந்து வாங்கிய மோகன்லால் அப்படியே ரோட்டில் ஒரு ட்ரைவ் போன காட்சிகளையும் ரசிகர்கள் செல்போன்களில் வீடியோவாக எடுத்து இணையத்தில் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











