திடீர் விசிட் .. பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துடன் தீபாவளி கொண்டாடிய மோகன்லால்.. என்ன ஸ்பெஷல்?

By

சென்னை: நடிகர் மோகன்லால் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்துடன் தீபாவளியை கொண்டாடி இருக்கிறார்.

பிரபல நடிகர் மோகன்லால், த்ரிஷயம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தார்.

முதல் பாகத்தில் நடித்தவர்களே இதில் நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இதை இயக்கியுள்ளார்.

ஒரே கட்டமாக

ஒரே கட்டமாக

நடிகை மீனா, எஸ்தர் அணில், ஆஷா சரத் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கியது. ஒரே கட்டமாக நடந்து முடிந்துவிட்டது. குறுகிய காலத்தில் தொடங்கி படம் முடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

துபாயில் மோகன்லால்

துபாயில் மோகன்லால்

இந்தப் படத்துக்கு முன் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்ட 'ராம்' என்ற படத்தில், நடிகர் மோகன்லால் அடுத்து நடிக்க இருக்கிறார். இதில் த்ரிஷா ஹீரோயின். இதற்கிடையே, ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டி அன்று நடிகர் மோகன்லால் துபாயில் இருந்தார். இந்தப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாயின.

ஒன்றாக தீபாவளி

ஒன்றாக தீபாவளி

அவர் ஒரு கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அவரும் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்தும் சந்தித்துள்ள புகைப்படங்கள் திடீரென நேற்று சமூக வலைதளங்களில் பரவின. இருவரும் ஒன்றாக தீபாவளியை கொண்டாடி இருக்கிறார்.

மனைவி மான்யதா

மனைவி மான்யதா

நடிகர் மோகன்லால் தீபாவளி அன்று மும்பையில் உள்ள சஞ்சய் தத் வீட்டுக்குச் சென்றார். அங்கு சஞ்சய் தத் மற்றும் அவர் மனைவி மானியதா உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். அவர்களுடன் தீபாவளியை கொண்டாடிய மோகன்லால், அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். சஞ்சய் தத்தை, ஃபிரண்ட் என்று கூறியுள்ளார்.

பங்கேற்க இருக்கிறார்

பங்கேற்க இருக்கிறார்

சில மாதங்களுக்கு முன் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார், நடிகர் சஞ்சய் தத். இதற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சஞ்சய் தத், சிகிச்சைக்குப் பிறகு இப்போது குணமடைந்துள்ளார். அவர் அடுத்து, யஷ் நடிக்கும் கே.ஜி.எப் சாப்டர் 2 படத்தின் ஷூட்டிங்கில் அவர் விரைவில் பங்கேற்க இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X