இயக்குநரான மோகன் லால்.. மம்மூட்டி, பிருத்விராஜ், சந்தோஷ் சிவன் என பிரபலங்கள் கலந்து கொண்ட பட பூஜை!

திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் நடிப்பு ஜாம்பவான் மோகன் லால் முதன் முறையாக புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

பாரோஸ் என தலைப்பிடப்பட்டுள்ள அந்த படத்தின் பிரம்மாண்ட பூஜை இன்று நடைபெற்றது.

இந்த பட பூஜையில் மலையாள திரையுலகின் முன்னணி பிரபலங்களான மம்மூட்டி, பிருத்விராஜ், பிரியதர்ஷன், சந்தோஷ் சிவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இயக்குநர் அவதாரம்

இயக்குநர் அவதாரம்

1980ம் ஆண்டு இயக்குநர் பாசில் இயக்கத்தில் வெளியான மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், தனது 60வது வயதில் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

பாரோஸ் பட பூஜை

பாரோஸ் பட பூஜை

சுமார் 340க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் மோகன் லால் இயக்குநர் அவதாரம் எடுத்திருப்பதை அறிந்து ஒட்டுமொத்த சினிமா உலகமும் ஆச்சர்யத்தில் வாழ்த்தி வருகிறது. இன்று அந்த படத்தின் பட பூஜை கோலாகலமாக நடைபெற்றது. மலையாள திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் அதில் பங்கேற்றனர்.

சக போட்டியாளர்

சக போட்டியாளர்

மோகன் லாலுக்கு மலையாள திரையுலகில் சக போட்டியாளர் என்றால் அது மம்மூக்கா மட்டும் தான். மோகன் லாலின் பாரோஸ் படத்தின் பட பூஜையில் மம்மூட்டியும் கலந்து கொண்டு தனது நண்பர் மோகன் லாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததை பார்த்து மலையாள திரையுலக ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

என்ன கதை

என்ன கதை

3டி ஃபேண்டஸி திரைப்படமாக உருவாக உள்ள இந்த படம் வாஸ்கோடகாமாவின் பொக்கிஷத்தை பாதுகாக்கும் பாதுகாவலன் பாரோஸ் என்பவரின் கதையை கருவாக கொண்டு உருவாக உள்ளது. கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கதையை மைடியர் குட்டிச்சாத்தன் படத்தை இயக்கிய ஜிஜோ புன்னூஸ் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிருத்விராஜ் நடிக்கிறார்

பிருத்விராஜ் நடிக்கிறார்

மோகன் லால் இயக்கும் இந்த படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடிக்கிறார். சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார். ஸ்பானிஷ் நடிகர்கள் சிலரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். பட பூஜை புகைப்படங்களை நடிகர் மோகன் லால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X