கேமரா ஸ்டார்ட்ஸ் ரோலிங்.. முதல் நாள் படப்பிடிப்பு.. இயக்குநராக கெத்து காட்டும் மோகன் லால்!
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன் லால் இயக்குநராக தனது முதல் நாள் படப்ப்டிப்பு அனுபவம் எப்படி இருந்தது என்பது தொடர்பான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால் நடித்த திரிஷ்யம் 2 படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
அடுத்த மாதம் வெளியாகவுள்ள மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் படத்திற்கு சில பிரிவுகளில் தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மோகன் லால்
நடிகராக 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மிரட்டிய மோகன் லால் பாரோஸ் எனும் படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். 3டி முறையில் 400 ஆண்டுகள் பழமையான ஃபேண்டஸி கதையை படமாக உருவாக்க திட்டமிட்டுள்ள மோகன் லால், சமீபத்தில் அந்த படத்தின் பட பூஜையை கோலாகலமாக நடத்தினார்.

முதல் நாள் அனுபவம்
நடிகராக இது நாள் வரை இருந்து வந்த மோகன் லால் முதன் முறையாக இயக்குநர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மற்ற கலைஞர்களை வேலை வாங்கும் அனுபவம் புது விதமாக இருந்தது என்று குறிப்பிடும் விதமாக அண்ட் தி கேமரா ஸ்டார்ட்ஸ் ரோலிங் என கேப்ஷன் கொடுத்து பணிபுரியும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

சந்தோஷ் சிவன் அருகே
ஹீரோவாகவும் இயக்குநராகவும் ஹீரோவாகவும் இந்த படத்தில் மோகன் லால் செயல்பட உள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தான் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். சந்தோஷ் சிவன் அருகே மைக் பிடித்துக் கொண்டு இயக்குநராக கெத்துக் காட்டும் மோகன் லாலின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

பெரிய டீம்
அறிமுக படம் என்றாலும் சாதாரண முறையில் சிறிய பட்ஜெட்டில் எல்லாம் மோகன் லால் சோதனை முயற்சியை மேற்கொள்ளாமல், மிகவும் பிரம்மாண்டமான முறையில் இந்த படத்தை இயக்கி வருகிறார். மிகப்பெரிய டீம் மோகன் லால் உடன் இணைந்து பணியாற்றுவதை அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் மூலமாகவே அறிந்து கொள்ள முடிகிறது.


Click it and Unblock the Notifications











