Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அந்த ஒரு கிக் ஷாட் போதும்.. யாரு மாஸுன்னு சொல்ல.. சிரஞ்சீவியை ட்ரோல் செய்யும் மோகன்லால் ரசிகர்கள்!
ஹைதராபாத்: மோகன்லாலின் லூசிஃபர் படத்தை தெலுங்கில் காட்ஃபாதர் என ரீமேக் செய்து நடித்துள்ளார் சிரஞ்சீவி.
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி, சல்மான் கான், நயன்தாரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள அந்த படத்தின் டிரைலர் வெளியானது.
டிரைலர் காட்சிகளை லூசிஃபர் படத்துடன் கம்பேர் செய்து மோகன்லால் தான் மாஸ் என மலையாள ரசிகர்கள் சிரஞ்சீவியை ட்ரோல் செய்து வருகின்றனர்.
தனுஷ்,
யுவன்
குரல்களில்
ரெண்டு
ராஜா…
அதிரிபுதிரியாக
வெளியானது
நானே
வருவேன்
செகண்ட்
சிங்கிள்

காட்ஃபாதர் டிரைலர் ரிலீஸ்
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி, சல்மான் கான், நயன்தாரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள காட்ஃபாதர் படத்தின் டிரைலர் வெளியானது. மலையாளத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், பிரித்விராஜ், விவேக் ஓபராய் மற்றும் டொவினோ தாமஸ் நடித்த லூசிஃபர் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரீமேக் ஆகும் மோகன்லால் படங்கள்
மலையாளத்தின் முன்னணி நடிகரான மோகன்லால் நடிக்கும் படங்கள் இந்தியளவில் பல்வேறு மொழிகளில் ரீமேக் ஆகி வருகிறது. மோகன்லாலின் த்ரிஷ்யம் படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் அதே பெயரில் ரீமேக் செய்தனர். தமிழில் பாபநாசம் எனும் டைட்டிலில் கமல் ரீமேக் செய்து நடித்திருந்தார். ஆனாலும், ஒரிஜினல் தான் சூப்பர் என ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், தற்போது லூசிஃபர் படத்தின் ரீமேக்கான காட்ஃபாதர் படத்திற்கும் அதே போன்றதொரு பிரச்சனை சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

லாலேட்டன் தான் மாஸ்
காட்ஃபாதர் படத்தில் சிரஞ்சிவியின் காட்சிகளையும் லூசிஃபர் படத்தில் லாலேட்டன் காட்சிகளையும் கம்பேர் செய்து மோகன்லால் தான் மாஸ் என தென்னிந்திய ரசிகர்கள் கமெண்ட் போட்டு சிரஞ்சீவியை ட்ரோல் செய்து வருகின்றனர். மோகன் ராஜா இயக்கிய நிலையிலும், டிரைலரில் ஒரு ஃபயர் இல்லையே என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

அதிக பட்ஜெட் இருந்தும்
30 கோடி பட்ஜெட்டில் உருவான லூசிஃபர் படத்தின் பாம்ப் பிளாஸ்ட் காட்சியையும் 100 கோடிக்கு மேல் அதிக பொருட்செலவில் உருவான காட்ஃபாதர் படத்தின் பாம்ப் பிளாஸ்ட் காட்சியையும் போட்டு எது நல்லா இருக்கு என கேள்வி எழுப்பி வருகின்றனர். சிஜி ரொம்பவே மோசம் என ட்ரோல்கள் குவிகின்றன.

அந்த ஒரு கிக்
லூசிஃபர் படத்தில் ஜான் விஜய் போலீஸாக நடித்திருப்பார். அவருக்கு நெஞ்சில் மோகன்லால் கிக் வைக்கும் காட்சியையும், காட்ஃபாதர் படத்தில் போலீசாக நடித்துள்ள சமுத்திரகனியை பெஞ்சில் உட்கார வைத்து சிரஞ்சீவி உதைக்கும் காட்சியையும் போட்டு யாரு மாஸுன்னு இந்த ஒரு சீனை பார்த்தாலே தெரிஞ்சிக்கலாம் என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ரீ ப்ளேஸ்
மோகன்லாலுக்கு நிகர் மோகன்லால் தான் என்றும் அவரது ஸ்க்ரின் பிரெசன்ஸ் எந்தவொரு நடிகருக்கும் வராது என்றும் அவர் படத்தில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால், அவரை ரீ ப்ளேஸ் பண்ண முடியாது என்றும் மோகன்லால் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.