Just In
- 26 min ago
பாஜக சார்பில் போட்டியிடுகிறேனா? எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்!
- 59 min ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
- 1 hr ago
திரும்பிச் செல்லுங்கள்.. படப்பிடிப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்.. ஷூட்டிங் கேன்சல்!
- 1 hr ago
குருவாயூரில் சாமி தரிசனம் செய்த சோம்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன்முறையாக வெளியிட்ட வீடியோ!
Don't Miss!
- News
பிரசாந்த் கிஷோர் டைரக்டர்...ஸ்டாலின் நடிகர்...சொல்வது எடப்பாடியார்
- Sports
அதே தப்பு.. இவ்ளோ காசை வேஸ்ட் பண்ணிட்டீங்களே.. சிக்கலில் சிஎஸ்கே.. கடுப்பில் ரசிகர்கள்!
- Finance
Budget 2021.. ஹெல்த்கேர் துறையில் ஒதுக்கீடு 40% வரை அதிகரிக்கலாம்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கமலை அடுத்து மோகன்லாலை வளைத்துப் போட்ட பிக் பாஸ்

திருவனந்தபுரம்: மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியை மோகன்லால் தொகுத்து வழங்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் இந்தியில் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சூப்பர் ஹிட்டானதை அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் அந்த நிகழ்ச்சியை துவங்கினார்கள்.
கடந்த ஆண்டு தமிழில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கினார்.

மலையாளம்
தமிழ், தெலுங்கு நிகழ்ச்சியை பார்த்த கேரள மக்கள் மலையாளத்தில் மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி இல்லையே என்று ஃபீல் செய்தார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு மலையாளத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது.

மோகன்லால்
மலையாளம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ் கோபி ஆகியோரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இறுதியில் மோகன்லாலை தேர்வு செய்துள்ளார்களாம்.

தமிழ்
ஜூன் மாதம் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்குமாம். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனும் ஜூன் மாதம் தான் துவங்குகிறது. முதல் சீசனை போன்றே இரண்டாவது சீசனையும் கமல் ஹாஸனே தொகுத்து வழங்குகிறார்.

போட்டியாளர்கள்
மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி கொச்சியில் நடக்கும் என்று கூறப்படுகிறது. பிற மொழிகளை போன்றே மலையாளத்திலும் 15 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். அவர் சினிமா மற்றும் சின்னத்திரையை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நானி
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கினார். தற்போது அவர் படங்களில் பிசியாக இருப்பதால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மறுத்துவிட்டாராம். இதையடுத்து நடிகர் நானி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என்று கூறப்படுகிறது.