மீண்டும் தொடங்குறாங்களாம்... மோகன்லால்- ஜாக்கிசான் நடிப்பில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் 'நாயர் ஸான்'
கொச்சி: கைவிடப்பட்டதாகக் கூறப்பட்ட மோகன்லால், ஜாக்கிசான் நடிக்கும் 'நாயர் ஸான்' படம் மீண்டும் தொடங்கப்பட இருக்கிறது.
இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக வெளிநாடுகளில் ஆதரவு தேடிய முக்கியப் போராளி, கேரளாவைச் சேர்ந்த ஏ.எம்.நாயர் எனப்படும் ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயர்.
இவரை, நாயர் ஸான் என்று அழைத்தனர். பொறியாளரான இவர் ஜப்பானில் உள்ள கியாட்டோ நகரில் உணவகம் நடத்தி வந்தார்..

400 கோடி பட்ஜெட்
பிரிட்டீஷ் எதிர்ப்பாளரான இவர், இந்திய தேசிய ராணுவத்துக்கும் நேதாஜிக்கும் உதவி செய்தவர். இவரது வாழ்க்கையை மையப்படுத்தி சுமார் ரூ. 400 கோடி பட்ஜெட்டில், மலையாளத்தில் படம் உருவாக்க, கடந்த 2009 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது.

ஆல்பர்ட் அன்டோனி
இதற்கு வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனம் ஒன்று முதலீடு செய்ய முன் வந்தது. படத்தை, நவ்யா நாயர் நடித்த கண்ணே மடங்குகா, ராகுல் மாதவ் நடித்த வாடாமல்லி ஆகிய மலையாள படங்களை இயக்கிய, ஆல்பர்ட் அன்டோனி இயக்குவதாக இருந்தார்.

ஜாக்கிசான்
மோகன்லால் ஹீரோவாகவும் ஜாக்கிசான் இன்னொரு ஹீரோவாகவும் நடிக்க இருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க இருந்தார். இந்நிலையில் இந்தப் படம் திடீரென கைவிடப்பட்டது. மோகன்லாலுக்கு சர்வதேச மார்க்கெட் வேல்யூ இல்லாததால் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டது.

மீண்டும்
இப்போது, மோகன்லாலின் புலி முருகன் மற்றும் ஜனதா கேரேஜ் படங்கள் ஓவர்சீஸிலும் வரவேற்பை பெற்றிருப்பதால் இந்தப் படத்தை மீண்டும் உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











