ஜீத்து ஜோசப்புடன் இணைந்த மோகன்லால் -த்ரிஷா.. 3 வருடங்களுக்கு பிறகு துவங்கிய சூட்டிங்!

எர்ணாகுளம் : நடிகர் மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப் மீண்டும் இணையும் படம் ராம்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்க திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனது.

ராம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் மோகன்லாலுக்கு நடிகை த்ரிஷா ஜோடி சேர்ந்துள்ளார்.

த்ரிஷ்யம் படங்கள்

த்ரிஷ்யம் படங்கள்

நடிகர் மோகன்லால் -இயக்குநர் ஜீத்து ஜோசப் சூப்பர் காம்பினேஷனில் வெளியான த்ரிஷ்யம் மற்றும் த்ரிஷ்யம் 2 படங்கள் மிகச்சிறப்பான வெற்றியை கொடுத்த படங்கள். தன்னுடைய குடும்பத்தின் நலனுக்காக மெனக்கெடும் ஒரு குடும்பத் தலைவனை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது.

குடும்பத்தை மீட்கும் மோகன்லால்

குடும்பத்தை மீட்கும் மோகன்லால்

மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மீனா இந்தப் படத்தில் நடித்திருந்தார். தன்னுடைய மகளை கேவலமாக படம்பிடிக்கும் சக மாணவனை தன்னுடைய மனைவியே கொலை செய்ய, அதிலிருந்து தன்னுடைய குடும்பத்தை மோகன்லால் எப்படி மீட்கிறார் என்பதாக இந்தப் படத்தின் கதைக்களம் காணப்பட்டது.

கமல் நடிப்பில் பாபநாசம்

கமல் நடிப்பில் பாபநாசம்

தமிழிலும் பாபநாசம் என்ற பெயரில் கமல் லீட் கதாபாத்திரத்தில் நடித்து இந்தப் படம் ரீமேக்காகி வெளியானது. சிறப்பான விமர்சனங்களை இந்தப் படம் பெற்றது. கமல் இந்தப் படத்தின்மூலம் ஏராளமான ரசிகர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு பெற்றிருந்தார். கவுதமியும் இந்தப் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்.

மலையாள வியாபாரத்தை உயர்த்தியவர்

மலையாள வியாபாரத்தை உயர்த்தியவர்

இயக்குநர் ஜீத்து ஜோசப் த்ரிஷ்யம் படம் மூலம் மலையாள திரையுலகின் வியாபாரத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தியவர். சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் மூலம் த்ரிஷ்யம் மட்டுமில்லாமல் பாபநாசம் படத்தையும் சிறப்பாக கொடுத்திருந்தார். பாபநாசம் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடி உருவாக்கப்பட்டிருந்தது.

மோகன்லால் -ஜீத்து ஜோசப் இணையும் ராம்

மோகன்லால் -ஜீத்து ஜோசப் இணையும் ராம்

இந்நிலையில் நடிகர் மோகன்லால் மற்றும் இயக்குநர் ஜீத்து ஜோசப் மீண்டும் இணையும் படம் ராம். இந்தப் படம் கடந்த 2020 டிசம்பர் மாதத்திலேயே அறிவிக்கப்பட்டு சூட்டிங்கும் துவங்கிய நிலையில் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது 3 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கியுள்ளது.

மோகன்லால் ஜோடி த்ரிஷா

மோகன்லால் ஜோடி த்ரிஷா

படத்தில் பாலிவுட் நடிகர் அடில் ஹுசைன் மற்றும் த்ரிஷா இணைந்துள்ளனர். இந்தப் படத்தின்மூலம் முதல்முறையாக மோகன்லாலிற்கு ஜோடியாகியுள்ளார் த்ரிஷா. இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங்கில் த்ரிஷா பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

எர்ணாகுளத்தில் துவங்கிய சூட்டிங்

எர்ணாகுளத்தில் துவங்கிய சூட்டிங்

தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் எர்ணாகுளத்தில் துவங்கப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 13ம் தேதி வரை அங்கு படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் தொடர்ந்து செப்டம்பர் 4ம் தேதி முதல் பிரிட்டனில் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெறவுள்ளதாகவும் படக்குழு தற்போது அப்டேட் தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X